(Reading time: 13 - 25 minutes)
Kaarigai
Kaarigai

"கண்ணம்மா இந்தா புள்ள நிறுத்து. அக்கம் பக்கம் யாரவது வந்துட போறாங்க" எங்கே இவள் அடிக்கும் அடியில் பவித்ரா ஏதாவது உளறுவாளோ என்ற பயத்தில் மாரியப்பன் இடையிட, அப்போது தான் அவன் அங்கே இருப்பது உணர்ந்த பவித்ராவுக்கு அன்று இரவு ஏதோ நடந்திருக்கிறது என்று தோன்றியது.

"அத்த அத்த, மாமா தான் மாமா தான்" மாரியப்பன் இரண்டு எட்டு பின்னே நகர்ந்து நின்றான்.

"அடி நாசமா போனவளே, கடைசில நீ என் குடும்பத்தை நாசமாக்கணும்னு தா வந்தியா...இல்லை இனி ஒரு நிமிஷம் நீ இங்க இருக்க கூடாது " என்றவள் அவள் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து கொண்டு வந்து வெளியே தள்ளினாள்.

"அத்த அத்த நான் நிஜமா தான் சொல்றேன். அத்த என்னை வெளிய அனுப்பாதீங்க...நான் ஒண்ணுமே பேசமா இருக்கேன்...எனக்கு பயமா இருக்கு" வெளியே தெரிந்த இருள் அவளுக்கு அச்சத்தை உண்டாக்கியது.

"இங்க பாரு இன்னும் ஒரு நிமிஷம் இங்க நின்ன உன் பேரையும் உன் அம்மா பேரையும் சேர்த்து நாறடிச்சுடுவேன் ஜாக்கிரதை "என்றவள் கதவை அடைத்தாள்.

வெளியே தெரிந்த இருள், தூரத்தில் கேட்ட நாய்களின் சத்தம் என எல்லாமுமாக அவளை பயமுறுத்தியது. மெல்ல கதவருகே சென்றவள் கதவை தட்ட கை எடுக்க, உள்ளே கேட்ட கண்ணம்மாவின் பேச்சு குரலில் ஸ்தம்பித்து நின்றாள்.

"என்னய்யா உன் வேலையை நீ காட்டிட்டில" கண்ணம்மாவின் கேள்வியில் ஒரு நிமிடம் பதறினாலும் "என்ன கண்ணம்மா அந்த புள்ள சொல்றதை நீ நம்பரிய? அவளை எம்புட்டு பாசமா நான் பார்த்தேன். " மாரியப்பன் சொல்வது கேட்டது பவித்ராவுக்கு.

"உன்னை பத்தி எனக்கு தெரியாதா? அது இந்த வீட்டை விட்டு எங்கயும் போனது இல்ல. அப்படி இருக்கும் போது இதுக்கு யாரு காரணம்னு எனக்கு தெரியாம இருக்காது. இப்படி எல்லாம் பண்ணி தான அந்த ஊரை காலி பண்ணிட்டு வந்தோம்...ஆனா நீ இன்னும் திருத்தல...இங்க பாருய்யா...என் புள்ளைக்கு அப்பன் இல்லாம போய்டா கூடாதுனு பாக்கறேன்....இது தான் கடைசி...இனிமே இப்படி எல்லாம் பண்ணுன நானே உன்னை தொரத்திடுவேன் ஜாக்கிரதை" வெளியே நின்று கேட்டு கொண்டிருந்த பவித்ரா அப்படியே ஸ்தம்பித்து போனாள். சிறிது நேரத்தில் எல்லாம் வெளியே வந்த கண்ணம்மா "என்னடி இன்னும் இங்க நின்னு என்ன பண்ணிட்டு இருக்க, போடின்னு சொன்னேன்ல"அவளை பிடித்து தள்ள தடுமாறி கீழே விழுந்தவள் மெல்ல எழுந்து நின்றாள். கண்ணம்மாவை ஒரு பார்வை பார்த்தாள். அந்த பார்வையின் வீரியத்தில் கண்ணம்மா ஒருநிமிடம் நடுங்கி தான் போனாள். ஆனாலும் அதை எல்லாம் காட்டி கொள்ளாமல் கதவை அடைத்து விட்டு விளக்கை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.