(Reading time: 13 - 25 minutes)
Kaarigai
Kaarigai

"கொஞ்சம் தண்ணி கொண்டு வா" எனவும் உள்ளே இருந்து ஒரு குவளையில் தண்ணீருடன் வெளியே வந்தாள் பவித்ரா. தண்ணீரை கொண்டு சென்றவள் கண்ணம்மாவின் அருகே வரும்போது மீண்டும் தலை சுற்ற தடுமாறி குவளையில் இருந்த நீரை கண்ணம்மா மேல் கொட்டியிருந்தாள்.

"அறிவுகெட்டவளே "அங்காரமாக ஒலித்த கண்ணம்மாவின் குரல் செவிகளுக்குள் நுழையும் முன் தலை சுற்றி கீழே விழுந்தாள் பவித்ரா.

யாரோ அவள் முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்புவது உணர்ந்து மெல்ல கண்ணை திறந்தாள் பவித்ரா.

அவள் முன் ஆங்காரமாக நின்றிருந்த கண்ணம்மாவின் பார்வையை கண்டு அவள் உள்ளம் நடுங்கியது.

"சண்டாளி "என்றவள் கொத்தாக அவள் முடியை பிடித்து இழுத்து அவளை நிறுத்தினாள்.

தலை முடியை பிடித்து இழுத்ததில் வலி உயிரை தாக்க, "அம்மா " என்று முனங்கினாள் பவித்ரா.

"என்னடி அம்மா, அம்மாவாம் அம்மா. நல்ல வளத்தி வெச்சுருக்கா...ஆமா நீ போனமாசம் தான பெரிய மனுஷி ஆன. இந்த மாசம் தண்ணி ஊத்துனியா?" தலை முடி அவள் கையில் இருக்க, கண்களில் நீர் கோர்த்திருக்க அவள் கேட்பது புரியாமல் விழித்தாள் பவித்ரா.

"என்னடி ஒண்ணுமே தெரியாத மாதிரி பாக்கற. அப்பாவி மாதிரி நடிச்சு நடிச்சு வயித்துல ஒண்ணை கொண்டு வந்துருக்க...உனக்கு அப்படி என்னடி அவசரம்?" கண்ணம்மாவின் கைகள் அவள் முதுகில் இடியாக இறங்கியது.

"அத்த அத்த அடிக்காதிங்க.வலிக்குது. நீங்க என்ன கேக்கறீங்கன்னு எனக்கு புரியல...வலிக்குது அத்த" அவள் காலை பிடித்து கதறினாள் பவித்ரா.

"புரியலையா??? நல்லா தெளிவா சொல்றேன். புரிஞ்சுக்கோ. உன் வயித்துல எவனோட புள்ளையை வாங்கிட்டு வந்துருக்க?" கண்ணம்மா கேட்க, விதிர்விதித்து போனாள் பவித்ரா.

"என்னடி பண்றதெல்லாம் பண்ணிட்டு என்னவோ உனக்கு எதுவுமே தெரியாத மாதிரி நிக்கற? உனக்கு தெரியாம தான் இது உன் வயித்துல வந்துச்சா? உன்னை எல்லாம் "என்றவள் வேகமாக உள்ளே சென்று அங்கிருந்த விளக்குமாறை கொண்டுவந்து அவளை அடிக்க, "ஐயோ அத்த அத்த அடிக்காதிங்க. வேற… வேற ஏதோ தப்ப புரிஞ்சுக்கிட்டீங்க" அழுகையினுடே சொன்னாள் பவித்ரா.

"என்னது தப்பா புரிஞ்சுக்கிட்டானா? இந்த ஊருல பொம்பளைங்க மாசமானா எங்கிட்ட தான் வந்து கேட்டு தெரிஞ்சுக்கிட்டு போவாங்க. எனக்கே சொல்றியா நீ" மீண்டும் அடி விழ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.