(Reading time: 14 - 28 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

சொல்லி அழுதுவிடுங்க!" தனக்கென்ற ஒருவர் இன்பத்தில் மட்டுமன்றி துன்பத்திலும் உடன் நானிருக்கிறேன் என்றிருந்தால் அகிலத்தில் தான் ஒருவரை வீழ்த்த வல்ல ஆயுதம் உருவாகுமோ? அது சாத்தியப்படா ஒன்று! கூறிவிடலாம் இறுதிவரை தனிமையை என்னால் வென்றுவிட இயலும் என்று! வெல்லலாம் அது ஒன்றும் கடினமானச் செயல் அல்ல..! எனினும், தங்களுக்கு உண்மையுள்ள ஒற்றை உயிருக்காக ஓர் நாள் ஒரே ஓர் நாள் வாழ்ந்துப் பாருங்கள்...அது தாயோ, தந்தையோ, மனைவியோ, நண்பனோ இல்லை பிள்ளைகளோ..! ஏன் அது தங்களின் சுயமாகவும் இருக்கலாம்..! ஒற்றை நாள் நமக்காக தம் வாழ்வை அர்ப்பணித்தவர், நம் நலம் விரும்புவரிடத்தில் அவருக்காக வாழ்ந்துத் தான் பாருங்கள்! அன்பென்பது புனிதமானது! ஆர்பரிக்கும் ஆழியின் ஆழ்நிலையின் அமைதிக் கொண்டது! அமைதிக்கொண்ட, அனைவரிடத்திலும் அன்புப் பாராட்டும் மனதிடம் ஒட்டுமொத்த பிரபஞ்சமே சரணடைந்துவிடும்! இறைவனும் அந்நபருக்காக அனைத்தையும் செய்ய தயாராய் இருப்பான். அதற்கு தவநிலைகள் அவசியமானதல்ல...!

சிவன்யாவின் ஆறுதல் அவன் மனதினைத் திறக்கும் சாவியாய் உருமாற தன் மனக்காயங்களை முழுதுமாய் அழுதுத் தீர்த்தான் அசோக். அவன் கண்ணீருக்கு நம்பிக்கையானவள் அவளல்லவா!

"அப்பாவை கஷ்டப்படுத்திட்டேன் சிவா!" ஏனோ அவ்வார்த்தைகளின் வலியினை அவளால் மிக நன்றாகவே உணர முடிந்தது. எவ்வளவுத்தான் அவனாலும் அன்பில்லாதவனாய் நாடகமாட இயலும்? அங்கு அனைவர் மனதிலும் சுரக்கும் அன்பென்னும் ஊற்று யாரும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதே உண்மை! சிறுவயது முதல் எவர் பாசத்திற்காக ஏங்கினானோ இன்று அவரையே காயப்படுத்தி, தன்னையும் காயப்படுத்திக் கொண்டிருக்கிறான் அந்தப் பைத்தியக்காரன்!

"நான் ஒண்ணுக் கேட்கட்டா? ஒருவேளை...அம்மா உயிரோட இருந்திருந்தா அவர் செய்த தவறை எல்லாம் மன்னித்திருப்பீங்கல்ல?" என்ற வினா அவன் கண்ணீரை சட்டென நிறுத்தியது. புரியாதவனாய் அவள் முகம் நோக்கினான் அசோக்.

"பதில் சொல்லுங்க!" சில நொடிகள் மௌனம் சாதித்தப்பின்...'ஆம்..!' என்றுத் தலையசைத்தான் அவன்.

"அப்பறம் என்ன? அவர் செய்தது தப்புத்தான்! ஆனா...! அதற்கான தண்டனையை இத்தனை வருடமாய் அவர் அனுபவித்திருக்காரு!யோசித்துப் பாருங்க..!தண்டனையை அனுபவித்து, திருந்தி, மன்னிப்புக் கேட்ட அப்பறம் மன்னிக்க முடியாத தண்டனைன்னு ஏதுமில்லை! உண்மையை சொல்லப்போனா..நடந்த விஷயத்துல அவரைத் தண்டிக்கிற உரிமை அம்மாக்குத்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.