(Reading time: 14 - 28 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

"என்னை மன்னித்துவிடுடி! நான் அன்னிக்கு வருவதற்குள்ளே ஏதேதோ நடந்துடுச்சு! ஏன்டி என்கிட்ட வரணும்னு தோணலை? நான் அவ்வளவு பெரிய பாவியா? நீ உன் கையாலே என்னை கொன்றிருக்கலாம் தர்மா...ஏன்டி என்னை விட்டுட்டு போன?" கதறி அழுதவிதம் யாவரையும் உறைய வைத்திருக்கும்!

"என்னைப் பாருங்க...! சில வார்த்தைகளைக் கேட்டப்பிறகு என்னால எப்படி உங்கக் கூட சேர்ந்து வாழ முடியும்? என் வயிற்றுல வளர்ந்தது உங்க இரத்தம்! ஒருவேளை அதைக்கேட்டப்பிறகும் உங்கக்கூட நான் இருந்தா, என் மகனுக்கு நானே தவறானப் பெயர் ஏற்படுத்தித் தந்த மாதிரி ஆகாதா? மனசுல காயத்தோட உங்கக்கூட வாழ்ந்திருந்தா நாம சந்தோஷமாகவே இருந்திருக்க முடியாதுங்க...! உங்களைவிட்டுப் போன ஒவ்வொரு நாளுமே உங்க நினைப்புல தான் நான் வாழ்ந்தேன். அது எனக்கு ஒரு பாரமாகவே தெரியலை!" அவ்வார்த்தைகளைக் கேட்டவர் நொறுங்கிப் போனார்.

"நான் பண்ண பாவத்துக்கு என்னைக் கொன்னுடு தர்மா! நான் உன்கூட வாழணும்டி, என்னை உன்கூடவே கூட்டிட்டுப் போயிடு!" என்றவரின் வாயைப் பொத்தினார் அவர்.

"உங்களுக்கு நான் தேவை! அசோக்கிற்கு நீங்கத் தேவை! அவன் கொஞ்சம் கோபக்காரன் அவ்வளவுத்தான்! உங்க பாசம் கிடைக்காமல் அவன் ரொம்ப கஷ்டப்பட்டான். இப்போ அவனுக்கு நீங்கத்தேவை!" எவ்வாறு புரிய வைப்பார் அவனது வெறுப்பினை!

"அவன் என்னைக் கண்டாலே வெறுப்பாகிறான் தர்மா! எனக்குத் தெரியலைடி, அவன் என்னை ஏற்றுக்கொள்வானான்னு தெரியலை!" விரக்தியோடு கூறினார் அவர்.

"அவன் வருவான், உங்களைத் தேடி இங்கே வருவான்!" உறுதியோடு கூறினார் அவர். ஒரு தாய் அறிய மாட்டாரா தன் மகனின் மனநிலையை!

"அவன் உங்களை மாதிரி..! உங்களைத் தேடி நிச்சயம் அவன் வருவான்!" என்றவரின் கண்கள் கலங்கின..

"நீங்க வருவீங்கன்னும் எனக்குத் தெரியும்! அதனால தான் என் கடமைகள் பூர்த்தியானதும் இந்த வாழ்க்கை மேலே எனக்கிருந்தப் பிடிப்பை விட்டுட்டேன்! ஒருவேளை நான் உயிரோட இருந்திருந்தா சந்தோஷமா ஒன்று சேர்ந்திருப்போமான்னுத் தெரியலை! ஆனா, எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு! என் காதல் பொய்யானதில்லை. என்னைக் காதலித்தவரும் பொய்யானவர் இல்லை. நான் எங்கேயும் போகலை! என்னுடைய இடம் என்னிக்கும் இதுத்தான்!" என்று அவர் நெஞ்சத்தில் கரம்பதித்தார் தர்மா. வாழ்வின் ஒட்டுமொத்த ஆனந்தத்தையும் சூர்ய நாராயணனனால் அந்நொடி உணர முடிந்தது. தன் இணையிடமிருந்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.