(Reading time: 14 - 28 minutes)
Kaarigai
Kaarigai

தொடர்கதை - காரிகை - 19 - அமுதினி

தோளிலே நாளெல்லாம்

சாய்ந்து இருந்தால் போதுமே

வாழ்விலே ஆனந்தம் மேலும் நிறைந்தே கூடுமே

இதயம் எழுதும் இனிமையே...இன்பம் வேறேது

கனவில் வளர்ந்த கவிதையே...என்றும் மாறாது

"ன்னால அவரு கேட்டதுக்கு பதில் சொல்ல முடியலை. அதே சமயம் மறுபடியும் சாகணும்னு தோணலை. ஒன்னு தெரியுமா பவி, இந்த உலகத்துலயே சிறந்த உணர்வு எது தெரியுமா? நமக்காக ஒருவர் இருக்கறது தான். எனக்கு யாருமே இல்லைனு தெரிஞ்சதும் சாக தோணுச்சு...அதே சமயம் எனக்காக ஒருத்தர் இருக்காரு அப்படின்ற உணர்வு அந்த சூழ்நிலை எவ்ளோ பெரிய வரப்பிரசாதமா இருந்ததுன்னு என்னால சொல்ல முடியல. ஆனா அதே நேரம் அவரு சொன்னதை என்னால உடனடியா ஏத்துக்க முடியலை. ஆனா அவருடைய அன்பு, அக்கறை, அவருடைய நேர்மை இதெல்லாம் என்னை கொஞ்சம் கொஞ்சமா மாத்துச்சு. ரெஜிஸ்டர் மேரேஜ் நடந்துச்சு. எங்க கல்யாணம் முடிஞ்சு என்னை அவரு வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததும் சொன்ன முதல் வார்த்தை என்ன தெரியுமா?" லக்ஷ்மியின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

"லட்சுமி, நான் உன்னை மனதார நேசிக்கிறேன். எந்த சூழ்நிலையிலும் இதை மட்டும் நீ மறந்துட கூடாது. என் உடல்ல உயிர் இருக்கற வரைக்கும் நான் உன்னை விட்டு பிரிய மாட்டேன். இது நான் உனக்கு பண்ற சத்தியம். அதே மாதிரி நீயும் எனக்கு ஒரு சத்தியம் பண்ணு" தன முன் கையை நீட்டியபடி நின்ற சுந்தரத்தை பார்த்த லட்சுமி, "சொல்லுங்க" என்றாள்.

"எந்த காரணத்துக்காகவும் எந்த சூழ்நிலையிலும் நீ என்னுடைய இந்த அன்பையும் காதலையும் பரிதாபத்துநாளா வந்ததா நெனைக்க கூடாது. என்னை விட்டு பிரியணும்னும் நெனைக்க கூடாது. நான் முழுக்க முழுக்க உனக்கு உரிமையானவன். என்கிட்டே உனக்கு எந்த தயக்கமும் இருக்க கூடாது" என்ற சுந்தரத்தை பார்த்த லக்ஷ்மியின் விழிகள் நிறைந்திருந்தது. அவளின் கலங்கிய கண்களை கண்ட  சுந்தரம் அவளை மார்போடு சேர்த்து அணைத்து கொண்டார்.

அந்த நொடி லக்ஷ்மியின் மனதில் உண்டான பாதுகாப்பு உணர்வு என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.  அந்த அணைப்பில் காமம் இல்லை . அன்பும் காதலும் உனக்காக நான் இருக்கிறேன் என்ற ஆறுதலும் மட்டுமே இருந்தது.

"அவரு எனக்கு ஒரு கணவனா இருக்கலை பவி. அம்மாவா அப்பாவா பாதுகாவலனா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.