(Reading time: 14 - 28 minutes)
Kaarigai
Kaarigai

லட்சுமி எழ , "அம்மா, உமா படிச்சிட்டு இருக்கா. நீங்க அவளை கூட்டிட்டு வாங்க. நான் சத்யாவை கூட்டிட்டு வரேன்" என்றவள் படியேற  "கடவுளே அவளின் முகத்தில் இந்த சந்தோஷம் எப்போதும் நிலைக்கவேண்டுமே" என்ற வேண்டுதலுடன் சென்றார் லட்சுமி.

தன்னுடைய அறையில் லேப்டாப்பை மடியில் வைத்து கொண்டு ஏதோ ஒரு யோசனையுடன் அமர்ந்திருந்த சத்யா, கதவு தட்டும் சத்தம் கேட்டு நிமிர்ந்தான்.

"அம்மா வாங்கம்மா" என்ன இது புதுசா அம்மா கதவை எல்லாம் தட்றாங்க என எண்ணியவனுக்கு கதவை தள்ளி கொண்டு உள்ளே வந்த பவித்ராவை கண்டு ஆச்சரியம். இவள் என்னை ஆச்சர்யமும் அதிர்ச்சியம்  மாற்றி மாற்றி கொடுத்தே கொல்லப்போகிறாள்  என மனதிற்குள் எண்ணினான் சத்யா.

"சத்யா லன்ச் ரெடி சாப்பிட வாங்க" என்ற பவித்ராவின் முகம் பார்த்தான் சத்யா. அவளின் முகத்தில் இருந்து எதுவும் படிக்க முடியவில்லை அவனால்.

அவனின் பார்வையை உணர்ந்தவள் "சத்யா, காலைலயே ஏதோ யோசனைல சரியாவே சாப்பிடலை. அதனால தான் நானே உங்களை கூப்பிட மேல வந்தேன். நீங்க என்ன யோசிக்கிறிங்கனு எனக்கு தெரியுது. ஆனா எதுவா இருந்தாலும் இப்போ யோசிக்காதிங்க. நிம்மதியா சாப்பிடுங்க சத்யா. உங்களுக்கு நான் சீக்கிரமே பதில் சொல்றேன்" என்ற பவித்ராவை பார்த்த சத்யாவின் கண்களில் அளவிட முடியாத காதல் இருந்தது.

இத்தனை நேரம் அவனை நிமிர்ந்து பார்த்து பேசிய பவித்ராவால் அவனின் இந்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்தாள்.

"தேங்க்ஸ் பவித்ரா. உன்னுடைய பதிலுக்காக காத்திருக்கிறேன். நல்ல பதிலா இருக்கும் அப்படிங்கற நம்பிக்கையோடு" என்றான் சத்யா. கீழே இறங்கி செல்லும் பவித்ராவை பார்த்தபடி இறங்கிய சத்யாவின் மனதில் இப்போது ஒரு நம்பிக்கை வந்திருந்தது.

"ஐயோ பவித்ரா போதும். ப்ளீஸ் இப்போவே என்னால எழுந்திருக்க முடியல" பவித்ராவிடம் கெஞ்சி கொண்டிருந்தான் சத்யா.

"அம்மா பாருங்கம்மா. அப்போ என் சமையல் நல்லா இல்லை அப்படி தானே?" பவித்ரா முகத்தை தூக்கி வைத்து கொள்ள, "அம்மா தாயே இந்த மாதிரி நான் சாப்பிட்டதே இல்லை. அம்மா சமையலை கூட நான் இவ்ளோ புல்லா சாப்பிட்டது இல்லை. இந்த பாயசத்தை நான் ஒரு ஹாப் ஹௌர் அப்பறம் குடிக்கறேனே ப்ளீஸ்" சத்யா கெஞ்சாத குறையாக சொல்ல, 'ஹ்ம்ம் சரி " என்ற பவித்ரா எல்லாவற்றையும் எடுத்து சமயலறையில் வைக்க, "அடப்பாவி ஒரே நிமிஷத்துல என் சமையலை இப்படி தூக்கி கீழ போட்டுட்டியேடா" என்று கன்னத்தில் கை வைத்தார் லட்சுமி.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.