(Reading time: 14 - 28 minutes)
Kaarigai
Kaarigai

மதிய உணவை நிறைவாக உண்டதாலோ என்னவோ உமாவும் லக்ஷ்மியும் ஒரு குட்டி தூக்கம் போட, கையில் ஒரு சிறிய டம்பளரில் பாயாசத்துடன் மேலே சென்றாள் பவித்ரா.

கையில் ஏதோ புத்தகத்தை வைத்து படித்து கொண்டிருந்த சத்யா வாசலில் நிழலாடுவதை கண்டு நிமிர்ந்து பார்த்தான்.

"இந்தாங்க" என அவள் நீட்டிய டம்பளரை வாங்கியவன், "நீ இதை என்னை குடிக்க வெக்காம விடமாட்ட போல" என்றான் சிரிப்புடன்.

அவன் அதை குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தாள் பவித்ரா.

காலி டம்பளரை வாங்கி கொண்டவள், அங்கேயே யோசனையுடன் நிற்கவும் அவள் ஏதோ சொல்ல வந்திருக்கிறாள் என புரிந்தது சத்யாவுக்கு. அவளாக சொல்லட்டும் என அமைதியாக அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் சத்யா.

"சத்யா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்" - பவித்ரா

"சொல்லு பவித்ரா" கவனத்தியதை அவளிடம் திருப்பி அவளை நோக்கி அமர்ந்தான்.

"சத்யா என் கடந்தகாலத்தை பற்றி உங்களுக்கு தெரியும்னு சொன்னிங்க. ஆனா உங்களுக்கு நான் அம்மாகிட்ட பேசுனது மட்டும் தான் தெரிந்திருக்கும். நான் அவங்க கிட்ட சொல்லாத ஒரு விஷயம் இருக்கு. அதை நான் உங்க கிட்ட சொல்லணும்னு நெனைக்கிறேன்" சொன்னவள் சில நொடி இடைவெளி விட்டாள்.

"நான் சென்னைக்கு வந்ததுக்கு அப்பறம் சகுந்தலா அம்மா என்னை மனநல மருத்துவர் கிட்ட கூட்டிட்டு போனாங்க. அங்க எடுத்துக்கிட்டா டிரீட்மென்ட் மூலமா என்னால என்னுடைய மனஅழுத்தம் எல்லாம் கடந்து வெளிய வர முடிஞ்சுது. படிக்க முடிஞ்சுது. வேலை செய்ய முடிஞ்சுது. ஆனா...அது..."சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாள் தான். ஆனாலும் சொல்ல தொடங்குகையில் சற்றே தயக்கமாக இருந்தது.

"ஆனா உன்னால உன்னுடைய காயங்களை மறந்து தாம்பத்திய வாழ்க்கைல ஈடு பட முடியாது. அப்படியே அது நடக்கணும்னா அதுக்கு நீ மனதார உன்னை தயார் படுத்திக்கணும். உன்னை வேற யாரவது வற்புறித்தினாலோ இல்லை உன் முழு மனதோடு இல்லாமல் நீயாகவே  உன்னை வற்புறுத்திகிட்டாலோ மறுபடியும் நீ அதையே பழைய டிப்ரெஷஷன் ஸ்டேட்க்கு போக கூடிய நிலை வரும். சரியா பவி ?" சத்யாவின் பதிலில் அதிர்ச்சியுடன் அவனை நோக்கினாள் பவித்ரா.

"உன்னை பற்றி தெரிந்ததும் நான் முருகன் மூலமா உன்னை ட்ரீட் பண்ணுன டாக்டர் வித்யாவை பார்த்தேன் பவி. முதல்ல அவங்க உன்னை பத்தி எதுவும் சொல்லமாட்டேனு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.