(Reading time: 14 - 28 minutes)
Kaarigai
Kaarigai

சொன்னாங்க. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படறேன் அதுக்கு அவங்களுடைய வழிகாட்டுதல் வேணும்னு சொன்னதுக்கு அப்பறம் தான் அவங்க என்கிட்டே எல்லாமே சொன்னாங்க. பவி, உன்னை முதல் முதல்ல பார்த்தப்போ நீ தான் எனக்கானவள்னு என் மனசு சொல்லுச்சு. அது என்னையும் அறியாமல் காதலா வளந்துச்சு. அந்த காதல் உன் மேல கோவமா மாறுனப்போ உன்னை பலி வாங்கணும்னு எனக்கு நானே சொல்லி என் மூளையை நம்ப வெச்சு உன்னை பாக்க சென்னை வந்தேன். ஆனா நீ மயங்கி கீழ விழுந்தப்போ என் இருதயம் துடிச்சது தெரியுமா அப்போ தான் என்னை நானே எவ்ளோ நாளா ஏமாத்திட்டு இருக்கேனு உணர்ந்தேன். உன்மேல எனக்கு இருந்தது கோவமே இல்லைனு அப்போ தான் புரிஞ்சுது. உன்னை பத்தி தெரிஞ்சப்போ எனக்கு உன்னை என் மடியில சாய்ச்சு உனக்கு நான் இருக்கேன் பவினு சொல்லணும்னு தான் தோணுச்சு...உன்னை நான் நேசிக்க உன் அழகு தான் காரணம்னு நீ நெனைக்கிறியா பவி? தாம்பத்திய உறவு அப்படிங்கறது வாழ்க்கைல ஒரு அங்கம். அதுவே வாழ்க்கை இல்லை பவி.  அதுக்காக நான் உன்னை விட்ருவேனு உனக்கு தோணுதா?" பவித்ராவின் கைகளை பற்றி கொண்டான் சத்யா. பவித்ரா சிலையாக நின்றிருந்தாள்.

அவனுக்கு இதுவும் தெரியும் என்பது அவளுக்கு ஆச்சர்யம் தான் அனால் அவளே இதை அவனிடம் சொன்னாலும் அவன் இப்படி தான் சொல்லுவான் என அவளுக்கு தெரிந்தே இருந்தது. அவனின் அந்த முடிவில் அவளுக்கு ஆச்சர்யம் வரவில்லை என்பது தான் உண்மை.

தன்னை யோசனையில் இருந்து மீட்டு கொண்டவள் "சத்யா, என் வாழ்க்கையில் நடந்தது எல்லாம்  எனக்கு உறவுகள் மேல் நம்பிக்கை வந்ததே உங்களாலும் லட்சுமி அம்மாவாலும் தான். நான் உங்களை வெறும் தாம்பத்திய உறவை மட்டும் பெருசா நினைப்பவர் அப்படினு நினைக்கலை. என்னுடைய மனம் இதை எல்லாம் ஏத்துக்கிட்டு திருமண வாழ்க்கையில் நுழைய எவ்ளோ நாள் எவ்ளோ வருஷம் ஆகும்னு தெரியல சத்யா. அப்படி இருக்கும் பொது உங்களை எனக்காக வருஷ கணக்குல காத்திருக்க வைக்க என் மனசாட்சி இடம் கொடுக்கலை.ஒரு வேளை என் மனசு அதுக்கு எல்லாம் கடைசி வரை தயாராகவே இல்லைனா??? உண்மையா மனசை மறைக்காம சொல்லனும்னா எனக்கு உங்களை பிடிச்சிருக்கு சத்யா. ஆனா உங்க கூட என்னால சந்தோசமா வாழ முடியுமான்னு பயமா இருக்கு. என்னுடைய இந்த குறையால உங்களை நான் இழந்துடுவேனோனு பயமா இருக்கு. இப்போ உங்களை விட்டு விலகுனா வலிக்கிறதை விட அப்போ ரொம்ப வலிக்குமே" இதை சொல்லி முடிக்கையில் பவித்ராவின் முகம் வலியாலும் வேதனையாலும் நிரம்பியது.

அவளின் அருகே சென்று அவளின் முகத்தை கையில் ஏந்தியவன் "பவிம்மா நீ என் கூட இந்த

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.