(Reading time: 14 - 28 minutes)
Kaarigai
Kaarigai

இருந்தாரு. கணவர்ன்ற உரிமைல என்னை தொடல. என்னை படிக்க வெச்சாரு. என்னை நம்பிக்கையும் தைரியமும் உடையவளா மாத்துனாரு. எனக்கு நடந்தது எல்லாம் எனக்கு ஏற்பட்ட கெட்ட கனவொனு நானே நம்பும்படி செய்தார். என்னுடைய முழு மனதோடு நான் அவரையும் இந்த திருமண வாழ்வையும் ஏத்துக்கற வரைக்கும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காம நடந்துக்கிட்டாரு. யாருமே நம்ப மாட்டாங்க பவிம்மா, அவரை நான் ஐந்து வருடங்கள் காக்க வெச்சேன் பவி. அந்த ஐந்து வருடம் மட்டும் இல்லை அவரோடு நான் வாழ்ந்த இந்த இருபத்தி எட்டு வருடத்துல ஒரு நாள் கூட அவரு என் மேல கோவப்பட்டது இல்லை. திட்டுனது இல்லை. முகம் சுழிச்சது இல்லை." லட்சுமி சொல்ல சொல்ல சுந்தரத்தின் மீது மரியாதை கூடி கொண்டே போனது என்றால் லக்ஷ்மியின் மீதான அபிமானம் இன்னும் அதிகமானது பவித்ராவுக்கு.

"எந்த காரணத்துக்காகவும் என் கடந்த காலத்தை யாருகிட்டயும் சொல்ல கூடாதுனு சத்தியம் வாங்கிட்டாரு. ஆனா இப்போ இந்த நிமிஷம் அவரு என்கூட இல்லைனாலும் நான் இதை உன்கிட்ட சொன்னதுக்காக என்மேல கோவப்படமாட்டாரு. என்கிட்டே வந்து அவன் உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னப்போ எனக்கு ஒன்னும் ஆச்சர்யம் இல்லை ஏன்னா அவன் அப்படிப்பட்ட மனிதரின் மகன். அவரை பத்தி இந்த விஷயம் எதுவுமே அவனுக்கு தெரியாது. ஆனா அவருடைய குணம் அவன் கிட்ட அப்படியே இருக்கு.  இதை எல்லாம் நான் உன்கிட்ட சொல்ல காரணம் என்ன தெரியுமா பவி? என் பையனுக்கு நீ சரி சொல்லணும்னு இல்லை. என்னால உன் வேதனையையும் கஷ்டத்தையும் புரிஞ்சுக்க முடியும் அப்படிங்கறது உனக்கு தெரியணும்னு தான். நானே வாழ்ந்துட்டேன். நீ ஏன் பவிம்மா வாழக்கூடாது?" தன்னுடைய அறைக்கு வந்த பவித்ராவின் மனதில் அந்த கேள்வியே திரும்ப திரும்ப வந்து நின்றது.

இரவு முழுதும் உறக்கம் அவளை நெருங்கவே இல்லை. லட்சுமி அம்மாவின் கஷ்டத்தை கேட்டதில் இருந்து அவள் மனம் தன் கடந்த காலத்தை எண்ணி வருந்துவது வீண் என புரிந்தது. விடியும் வரை யோசித்தாள்.

விடியலை பறைசாற்றும் விதமாக சிவந்த சூரியன் அடிவானில் இருந்து மேலே மெல்ல எழுந்து வருவதை அந்த ஜன்னல் வழியே கண்ட பவித்ராவின் மனதில் ஒரு தெளிவு இருந்தது. இன்று சத்யாவிடம் பேசிவிட வேண்டும் என மனதில் முடிவு செய்தவள் குளித்துவிட்டு அந்த அறையில் இருந்து வெளியே வந்தாள். பூஜை அறையில் விளக்கேற்றியவள் எல்லோருக்கும் காபி போட்டாள்.

 "இந்தாங்கம்மா காபி எடுத்துக்கோங்க " என தன்னுடைய முன் காபி ட்ரேயுடன் நின்ற

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.