ரேச்சலுக்கு அன்று கொஞ்சம் கூடுதல் வேலைகள் இருந்தன. சர்ச்சுக்கு அம்மாவுடன் மெடிக்கல் கேம்பிற்கு செல்ல வேண்டும். பிறகு பாதிரியார் நடத்தும் ஆசிரமத்திற்கு சென்று அங்கு குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
தன்னுடைய அறைக்கு சென்று அன்று உடுத்த வேண்டிய உடையை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தாள்.
"இன்னைக்கு கிளைமேட் சூப்பர் கூலா இருக்கு... இதுக்கு ரெட் கலர் டிரஸ் ரொம்ப நல்லா இருக்கும்" என்று சொல்லிக்கொண்டே ஒரு ஃபுல் ஸ்லீவ் சிகப்பு நிற காட்டன் சுடிதாரை எடுத்தாள்.
அவள் உடையை தேர்ந்தெடுத்து விட்டு திரும்பும் பொழுது அனிச்சையாக பார்வை ஜன்னல் வழியே பக்கத்து வீட்டை பார்த்தது. அங்கே ரோஜாக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. அதுவும் பன்னீர் ரோஜாக்கள்…. இயல்பான வண்ணத்தில்…. பார்க்கவே அழகாக இருந்தன. காற்றில் மெல்ல அசைந்து ஆடிக் கொண்டிருந்தன.
அவற்றின் இதழ்களின் மென்மையும் காற்றில் அசைந்தாடும் அழகும் அவள் மனம் கவர்ந்த ஒன்று…. சில சமயங்களில் ஒரு குட்டி பனித்துளியாக மாறி அதில் வழுக்கி விளையாட வேண்டும் என்று தோன்றும்.
மேரிம்மாவின் பெண் தலையில் வைத்துக் கொள்வாள். ரேச்சலுக்கு ஒருநாளும் அதை பறித்து தலையில் வைக்க தோன்றாது. ஏனெனில் தலைக்கு மேல் குடியேறிய சில நிமிடங்களிலேயே அது இதழ்கள் உதிர்த்து காம்பு மட்டும் நீட்டி கவலையாக நிற்கும். அதனால் அப்படியே பறித்து மென்மையாக கர்த்தரின் பாதத்தில் வைத்து விடுவாள்.
அப்பொழுது உயரமான ஒருவன் தோட்டத்திற்குள் பிரவேசிப்பது தெரிந்தது. கையில் அலைபேசியுடன் பேசிக் கொண்டே வந்தவனுடைய முகத்தில் சிந்தனை படர்ந்து இருப்பது தெரிந்தது. தன்னிச்சையாக நடந்தவன் சட்டென அந்த ரோஜா மலர்அருகே வந்தான். அந்த மலர் சற்று பெரியதாக இருந்தது.
அந்த மலரை பார்த்துக்கொண்டே நின்றான். அவன் என்ன செய்யப்போகிறான் என்று கவனப்படுத்தினாள். பறிப்பான்… அல்லது பிய்த்து போடுவான்...அவன் என்ன செய்கிறான் என்று அவள் கவனிக்கும் பொழுது… அவன் அந்த ரோஜா மலரை மென்மையாக தடவிக் கொடுத்தான்.
லைக்.. லைக்ப்பா! வெடுக்கென்று அதனுடைய இதழ்களை பறிக்காமல்… படக்கென்று கிள்ளி எடுக்காமல்… ஒரு ரிட்சுவல் -புனித சடங்கு- போல செய்கிறானே… வாட் ஈஸ் நெக்ஸ்ட்...
அவன் அந்த செடியிடம் மன்னிப்பு கேட்பவன் போல தலை குனிந்து அதனிடம் ஏதோ
M | Tu | W | Th | F |
---|---|---|---|---|
TA 🎵 MM-1-OKU 🎵 |
RTT |
MM-2-AMN |
PT |
UKEKKP 🎵 MM-1-OKU 🎵 |
UKEKKP |
UANI |
CM |
UANI |
UKAN |
RTT 🎵 UKEKKP 🎵 |
MM-2-AMN |
UKAN |
TM 🎵 UKEKKP 🎵 |
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Nan guess pannldu pola tana😂😂😂😂
Trnlljuka waiting jiii
Lovely update
Don't get confused... Heroine meerathan...
Something fishy. Thundle podunga pa..
Storyoda flow la Solluvom...
மனமார்ந்த பாராட்டுக்கள்!
உங்களுடைய பாராட்டு வார்த்தைகள் மிக அழகு.. தமிழக்கு பெருமை.
எனக்குதான் அட்லாஸ் மாதிரி பெரிய பொறுப்பை தந்துட்டீங்க...
இன்னும் கவனமாக எழுதனும்...
நன்றி சார்
இதுகூட பிரமாதம்!