ரேச்சல் சொன்னதை கேட்டு அங்கு வந்த விஜயா…
" அட உங்க அம்மா ஏன் இப்படி சொன்னாங்க. யார் அவங்க…" என்று கேட்டார்.
அதற்குள் தன்னுடைய கணக்கீட்டை அவசரமாக முடித்த நந்தினி அன்னையின் கையை பிடித்து,
"அம்மா… ஒருவேளை அதுதானா… ஒரு வாரமாக நான் சரிவர கவனிக்கவில்லை…" கொஞ்சம் வெட்கம் மிளிர மெல்லிய குரலில் சொன்னாள். அதற்குள் ரேச்சல்,
"எங்க அம்மா ஒரு கைனகாலஜிஸ்ட், டாக்டர்.ஷீலா மேத்யூஸ். அவர்கள் பார்வையிலேயே விஷயத்தை கண்டுபிடித்துவிடுவார்கள் ஆன்ட்டி!. இங்கே சுற்றி இருக்கும் அத்தனை கிராம மக்களும் அம்மாவிடம்தான் பிரசவம் பார்க்கிறார்கள்."
அதை கேட்ட ரஞ்சனுக்கு பளிச்சென்று விஷயம் புரிந்து விட… "நந்தூ…" என்று குதாகலித்தான்.
"வாவ்… யாரு இவங்க செம குட் நியூஸ் சொல்லி இருக்காங்க… ஸ்வீட் கொடுக்கணும்" சத்யன் சொல்ல,
"அதை அவங்க அம்மாட்டதான் தரணும். நாம கவனிக்காததை கவனிச்சு சொல்லிட்டாங்களே…" விஜயா ஆச்சரியப்பட்டார். தொடர்ந்து,
"நான் உங்கள் அம்மாவை பார்க்க வேண்டுமே நந்துவை அவங்கள்ட்டதான் செக் பண்ணணும்.அவர்களை எப்பொழுது நான் சந்திக்கலாம்" என்று ரேச்சலிடம் கேட்டார்.
" ஆன்ட்டி... நாங்கள் இப்போது சர்ச்சுக்கு செல்கிறோம். மெடிக்கல் கேம்ப் முடிச்சு அங்கிருந்து திரும்பி வர இரவாகி விடும். நீங்கள் நாளை காலை அவர்களை சந்திக்கலாம். நான் அம்மாவிடம் சொல்லிவிடுகிறேன்."
"இரும்மா காபி குடிச்சிட்டு போம்மா" விஜயா உபசரிக்க,
"ஆன்ட்டி மன்னிக்கவும்... எனக்கு ஏற்கனவே ரொம்ப நேரமாகி விட்டது. நான் வருகிறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.
அவள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்த விஜயா…
"எவ்வளவு நாட்கள் இந்த நல்ல சேதிக்காக காத்திருந்தோம். தேவதை மாதிரி வந்து இந்த பொண்ணு சொல்லிட்டா… " என்றார்.
"ஓகே… ஓகே… சாயங்காலம் வர்றப்ப நிறைய ஸ்வீட் வாங்கி வந்துடறோம்… அவங்க கிட்ட கொடுத்திடுங்க. பக்கத்துலயே டாக்டர் இருப்பதும் நல்லதுக்குதான்." ரஞ்சன் சொல்ல, அங்கு வந்த தாத்தா…
"ஷீலா மேத்யூஸ் ஒரு மகபேறு மருத்துவர்னு எனக்கு தெரியாது. அவங்க இங்கே வந்தே