சொன்னான். பிறகு பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய கத்தரிகோலை எடுத்தான்.
ஓ… பூவை பறிப்பதற்கு அனுமதி கேட்டிருப்பானோ…?. ஆமாம்... அவனுக்கு எதற்கு ரோஜா பூ… சாமிக்கு போடவா என்று நினைக்கும்போதே மனம் மறுத்தது.ஏனெனில் அது ஒற்றை ரோஜா!.
காதல் தூதுவிட இருக்குமோ..?. அவள் யோசிக்க…
அவன் சுற்றும் புறமும் பார்வையால் அலசினான். சொந்த தோட்டத்தில் பறிக்க எதற்கு இந்த களவாணித்தனம்… அது அவனுடைய தோற்றத்திற்கு பொருந்தவே இல்லை.. அவள் உதட்டை சுளித்தாள்.
அதற்குள் அவனை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டவன்…. அந்த ரோஜாவை பறித்து பத்திரபடுத்தியவாறே திரும்பி நடந்தான்…
ப்ச்… யாருக்கும் தெரியாமல் இவ்வளவு கேர்ஃபுல்லா ரோஜாவை கைபற்றுவது ஒரே விஷயத்திற்காகத்தான் இருக்கும். யாருக்கோ ப்ரோப்போஸ் பண்ண போறான்… அந்த கடினமான முகமும் பார்வையும் காதலுக்கு ஒத்து வராதே… கொஞ்சம் ஃப்ரீக்கியா… ரிலாக்ஸ்டா… முகத்தில் மென்சிரிப்பு தவழ… இந்த ரோஜாவை தந்தால் ஓகே ஆயிடும்… இவனானால் கையில் துப்பாக்கியுடன் யுத்த களத்திற்கு செல்லும் எஃபெக்டில் செல்கிறான். இன்னைக்கு அவனுக்கு கிடைக்க போகிற ரெஸ்பான்ஸில் புறமுதுகிட்டு ஓடி வரப் போறான்…. நினைக்கும்போதே அவளுக்கு சிரிப்பு வந்தது.
என்ன ஒரு சிக்கல் என்றால் கடைசிவரை அவனுடைய முகத்தையே பார்க்க முடியவில்லை. பார்த்திருந்தால் அவனுடைய காதல் தேறுமா தேறாதா என்று கணித்திருப்பாள்.
உயரமானவன் என்பது இப்போதெல்லாம் சகஜமாகி விட்டது. அந்த ரோஜாவை பறித்த சடங்கு…! ஓகே, கொஞ்சம் மென்மையானவன்தான்… ம்… அந்த திருட்டுதனம்தான் பொருந்தவேயில்லை.. வீட்டுக்கு தெரியாமல் காதலிக்கிறானோ..? அவள் அவனுடைய மனோவியலை எடை போட்டுக் கொண்டிருந்தாள்.
அதே சமயத்தில் சர்ச்சுக்கு செல்ல தயாராகி வந்த ஷீலா மேத்யூஸ் டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தார்
"ரேச்சல் இன்னும் தயாராகி வரவில்லையா?" என்று மேரியிடம் கேட்டார்.
" இதோ வந்து விடுவார் அம்மா" என்று சொல்லி கொண்டே மேரி அவருக்கு காலை உணவு பரிமாற ஆரம்பித்தார்.
ஷீலாவின் பார்வை எதிரே இருந்த ஜன்னல் வழியே பக்கத்து வீட்டை பார்க்கவும்,
" புதிதாக ஊரிலிருந்து உறவினர்கள் வந்து இருப்பார்கள் போல" மேரி விளக்க...
"ஆமாம் நானும் கவனித்தேன். கொஞ்சம் ஆள் நடமாட்டம் இருக்கிறது அல்லவா. இதுவரை
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Nan guess pannldu pola tana😂😂😂😂
Trnlljuka waiting jiii
Lovely update
Don't get confused... Heroine meerathan...
Something fishy. Thundle podunga pa..
Storyoda flow la Solluvom...
மனமார்ந்த பாராட்டுக்கள்!
உங்களுடைய பாராட்டு வார்த்தைகள் மிக அழகு.. தமிழக்கு பெருமை.
எனக்குதான் அட்லாஸ் மாதிரி பெரிய பொறுப்பை தந்துட்டீங்க...
இன்னும் கவனமாக எழுதனும்...
நன்றி சார்
இதுகூட பிரமாதம்!