(Reading time: 14 - 28 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

அவர்கள் சாப்பிடும்போதே… கூடை நிறைய மாங்காயுடன் மேரி வந்து விட்டார்.

"எதுக்கு இவ்வளவு மாங்காய்?" என்று ரேச்சல் ஆச்சரியமாக கேட்டாள்.

 "இதை பக்கத்து வீட்டுல போய் கொடுத்துட்டு வரணும்"

" என்ன விஷயம்மா?" என்று கேட்க

"அதோ அந்த பெண் துணி காய போட்டுட்டு இருக்காங்கல்ல. அந்த பொண்ணுகிட்ட  இந்த கூடைய கொண்டு போய்  கொடுத்துட்டு வா"

ரேச்சல் பக்கத்து வீட்டில் துணி காயப் போட்டுக் கொண்டிருந்த பெண்ணை பார்த்து வைத்துக் கொண்டாள். யாரோ அவளை 'நந்து' என்று அழைக்கவும் அந்த பெண் உள்ளே சென்று விட்டாள்.

"அவங்க பேர் நந்துவா?" கேட்டுக் கொண்டவள் கூடையை எடுக்க எழுந்தாள்.

 அதற்குள் சாப்பிட்டு முடித்த ஷீலா  ஒரு சின்ன பேப்பரை எடுத்து எழுதி அந்தக் கூடையில் வைத்தாள்.

"என்ன எழுதி இருக்கிறீர்கள்?"

"அந்த பொண்ணு கர்ப்பமா இருக்கா. அவளுக்கு வாழ்த்துக்கள் சொல்லி இருக்கேன்அவளுக்கு இந்த மாங்காய் கொடுத்துட்டு சீக்கிரமே வா. நாம கிளம்பனும்" என்று சொன்னார்

"ஓகே மா, நான் போய் சீக்கிரமா தந்துவிட்டு வந்துடறேன்" என்று ரேச்சல் கிளம்பினாள்.

தோட்டத்திலிருந்து ஒற்றை ரோஜாவை யாருக்கும் தெரியாமல் பறித்த சத்யன் அதனைச் சட்டைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு தன்னுடைய அறைக்கு சென்றான்.  அங்கு பீரோவில் வைத்திருந்த மீராவின் புகைப்படத்திற்கு முன் அந்த பூவை வைத்தான்.

"மீரா, நீ இறந்து விட்டதாக நினைத்து இந்த பூவை உன்னிடம் வைக்கவில்லை. உனக்கு பிடித்த சில பொருட்களை  உன் பார்வையில் படும்படி வைக்க  வேண்டும் என்று நினைத்து இந்தப் பூவை கொண்டு வந்தேன். உனக்கு ரோஜா மலர் மிகவும் பிடிக்கும். எப்போதும் உன் அறையில்  உள்ள ஒரு ஜாடியில் ரோஜாக்கள் கொத்துக்கொத்தாக இருக்கும். இது எனக்கு நன்றாக தெரியும். உனக்கு ரோஜா மலர்களின் வண்ணம் அதனுடைய வாசமும் மிகவும் பிடிக்கும். அதனால் இதை கொண்டு வந்து உன்னிடம் வைத்திருக்கிறேன்" என்றான்.

" சீக்கிரமாக நீ என்னிடம் வந்து சேரும்பொழுது உனக்காக ஒரு பெரிய ரோஜா தோட்டத்தை அமைத்து வைத்து இருப்பேன் "

ம்… காதல் மனைவியின் புகைப்படத்தை பீரோவில் ஒளித்து வைத்து பேச வேண்டியதாகி விட்டது. எல்லாம் இந்த தாத்தாவால் வந்ததுமீராவை நினைவுபடுத்தும் எதுவும் அந்த

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.