(Reading time: 14 - 28 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

இரண்டு மாசம்தான் ஆகுது. அவங்க கணவர் இறந்துட்டதால சர்சின் அனுமதியோட இங்கே ஊழியம் செய்ய வந்திருப்பதாக சொல்லி இருந்தார்கள்."

"நாம் இங்கே வந்தது நல்ல முடிவுன்னு எனக்கு கன்ஃபர்ம் ஆயிடுச்சு. இனிமே மனுகுட்டி தனியா இருக்க மாட்டாள்' என்று சத்யன் நிம்மதியாக பேசினான்.

நந்தினியிடம் விடைபெற்று கிளம்பிய ரேச்சலுக்கு மனம் அங்கேயே விலகி நின்றது. மெடிக்கல் கேம்பிலும் மனம் ஒருமைபடவில்லை. அம்மா சொல்வதை காதுகள் கேட்க கைகள் தானாக செய்தன. ஆனால் மனம் அதில் லயிக்கவில்லை

மனதிற்குள் ஏதோ வித்தியாசமான உணர்வு தோன்றிக் கொண்டே இருந்தது. என்ன அது?

ரொம்பவும் பிரியமான மனிதர்களாக நந்தினியின் குடும்பத்தார் தோன்றியதாலா… இல்லைஅவள் சொன்ன செய்தியால் சட்டென அங்கே மகிழ்ச்சி பொங்கிய சூழலாஇல்லை.. இல்லை..

அவளை வேறு எதுவோ ஒன்று... மனதின் அடியில் நின்று பிராண்டியது. ஆழ யோசிக்கும்போது மூச்சு அடைப்பதுபோல திணறினாள். ஹாவாயை திறந்து பெரிதாக காற்றை உள்வாங்கினாள்.

"ரேச்சல்என்ன செய்கிறாய்? உன் கவனம் இங்கில்லை போல…" ஷீலாவின் குரல் அதட்டியது.

"ஐம் சாரி மா…" என்று மன்னிப்பு கேட்டவள் தன்னிலைக்கு வந்தாள்.

கேம்ப் முடித்துவிட்டு வீட்டிற்கு வரவும் மீண்டும் மனதிற்குள் நண்டு வளை தோண்ட ஆரம்பித்தது. சம்திங் ஃப்ஷ்ஷி!

அவள் யோசித்து பார்த்தபோது… அவளை பக்கத்து வீடுதான் மாயவலை ஒன்றை விரித்து மனசுழலுக்கு அடைப்பது புரிந்தது.

அவளை சுழட்டி அடிப்பது அந்த வீடா வீட்டிலிருக்கும் மனிதர்களா…? பகலிலே பலர் சூழ இருக்கும் போதே ஆட்டி வைத்த மனது இரவின் தனிமையில் சும்மா இருக்குமா?. ரேச்சலை உறங்க விடாமல் கலைத்துக் கொண்டே இருந்தது. கண்கள் ஒருவழியாக ஓயநள்ளிரவில் உறங்க ஆரம்பித்தாள்.

அச்சோ… அவன்…  அந்த பூக்காரன்தானேரோஜாவை கையில் ஏந்தியபடி அவளை நோக்கி வருகிறானேஎன்ன செய்ய போகிறான்? அவள் யோசிக்கும் போதே அவளிடம் அந்த ஒற்றை ரோஜாவை நீட்டுகிறான். மனம் தயங்கும்போதுகைகள் இயல்பாக நீண்டது

அவன் அவளுடைய கைகளில் அந்த ரோஜாவை வைக்கிறான்… என்ன இது தலையில் அல்லவா சூட வேண்டும் என்று கேள்வி மனதுள் எழரோஜாவை சுமந்திருந்த கைகளை பார்க்கிறாள்.

ஓஹ்…. அது ரோஜா மலரல்ல.. ரோஜா நிறத்தில் குமிழ் சிரிப்புடன் பூக்குவியலென ஒரு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.