(Reading time: 17 - 33 minutes)
Priyamaanavale
Priyamaanavale

அவன் பிடி இன்னும் இறுகியது.

"நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? " என்று அவளை உறுத்து விழித்தவனை பார்த்தவள் "சாத்தியமா உங்களை நினைக்கல" என்றாள் தமிழ்செல்வி அவனை வெறுப்பேற்ற வேண்டும் என்றே.

"அதான் தெரியுமே இல்லைனா அசோக் கிட்ட வேலைக்கு போறேன்னு சொல்லிருப்பியா? என்ன உன் பிரெண்டை பாக்காம இருக்க முடியலையோ??? இங்க பார் இந்த ராம் பேரு யார் முன்னாலயும் இறங்க என்னால அனுமதிக்க முடியாது. அதனால தான் உன்னை இந்த கம்பெனி டைரக்டரா போட்ருக்கேன். அதே மாதிரி உன்னை இங்க பாட்டி கூட விட்டுட்டு போனா யாரும் இல்லாத சமயத்துல மொத்த சொத்தையும் நீ உன் பேருக்கு மாத்துனாலும் மாத்திடுவ. அதான் இனி நான் ஆபீஸ் போகும் பொது நீயும் என் கூட வரணும். மத்தபடி இதெல்லாம் உனக்காக பண்ணுனேன், உன் மேல சாப்ட் கார்னெர் வந்துருச்சுனு எல்லாம் நினைக்காத" என்றவன் அதுவரை பற்றியிருந்த அவளின் கையை விட்டான்.

அவன் பற்றியிருந்த இடம் சிவந்து போயிருந்தது. அதை லேசாக தடவி விட்டவள் அவனிடம் இருந்து விலகி உள்ளே செல்ல, "அப்பறம் இன்னொரு விஷயம்..."என்ற ராமின் குரலில் திரும்பியவளை பார்த்தவன் "பாக்கியம் ஆண்டிக்கு பாட்டி வரவரைக்கும் லீவ் சொல்லிட்டேன். சோ மேடம் ஜாலியா இருக்கலாம்னு நெனைக்காதிங்க. எனக்கு சீக்கிரமே பசிக்கும் போல இருக்கு. அதனால சீக்கிரம் டின்னை ரெடி பண்ணு " என்றுவிட்டு மேலே தன்னுடைய அறையை நோக்கி வேகமாக செல்ல, அவனை பார்த்தவள் "பாவம் யாரு பெத்த புள்ளையோ என்னோட சமையலை சாப்பிட்டு எதுவும் ஆகாம இருந்தா சரி" என்று மனதிற்குள் நினைத்து சிரித்து கொண்டாள்.

தான் சமைத்த உணவுகளை எடுத்து டைனிங் டேபிளில் வைத்தவள் மேலே பார்த்தாள். அவன் மேலே ஏதோ கேம் விளையாடி கொண்டிருந்தான். "பெரிய மகாராஜா...போயி வேற கூப்டனுமா???" என முணுமுணுத்து கொண்டே மேலே ஏறியவள் "டிபன் ரெடி" என்றாள் அவனின் அருகே நின்று.

"எஸ் கமிங்" எனவும் "எஸ் கமிங்" என அவனை போலவே பழிப்பு காட்டிவிட்டு கீழே சென்றாள் தமிழ்செல்வி.

கீழே டைனிங் டேபிளில் இருந்த ஒரு சேரை இழுத்து போட்டு ராம் அமரவும், அவனுக்கு முன்னால் ஒரு தட்டை எடுத்து வைத்தவள், அதில் அவள் செய்திருந்த உணவு பதார்த்தங்களை எடுத்து வைத்தாள்.

ஒவ்வொன்றும் வெள்ளை, பச்சை, சிவப்பு என ஒவ்வொரு நிறத்தில் இருந்தது. அழகாக

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.