(Reading time: 17 - 33 minutes)
Priyamaanavale
Priyamaanavale

அமைதியாக இருந்தது. அனால் இன்னும் ஏதோ இறுக்கம் கூடியதை போல தோன்றியது தமிழுக்கு. அவள் அசோக்குடன் பேசியதாலா? ஆனால் எப்படி நேராக ஒருவரை பார்த்ததும் பேசாமல் ஒதுங்கி செல்ல முடியும்? அதுவும் எந்த தவறும் செய்யாத அவளுக்கு ஒரு நல்ல நண்பனாக இருந்தவனை பார்த்தும்? யோசனையுடன் அமர்ந்திருந்தாள் தமிழ்செல்வி.

கார் வீட்டு வாசலை அடையும் போதே அவர்களின் வீட்டு போர்டிகோ முன்பு இன்னும் ஒரு கார் நிற்பதை பார்த்த தமிழ், "இது யாருடைய கார்?" என்ற யோசனையுடன் பார்க்க, காரை நிறுத்திய ராம் இறங்கி வேகமாக அந்த காரின் அருகே போனான்.

அந்த காரின் கண்ணாடியை இரண்டு விரல்களால் நாசூக்காக ராம் தட்ட,  அதன் கண்ணாடி கீழிறங்கியது.

"ஹேய் நித்து, என்ன ஒரு சர்ப்ரைஸ்? ஒரு கால் பண்ண கூட இல்லையே...சொல்லிருந்தா ஏர்போர்ட் வந்துருப்பேன்ல. யூரோப்ல இருந்து வர சிக்ஸ் மந்த்ஸ் ஆகும்னு சொல்லிட்டு என்ன இது த்ரீ மந்த்ஸ்ல வந்து நிக்கற?" அவன் யாரிடமோ பேச, உள்ளே இருந்து பதில் வந்தது.

"ராம் எக்ச்சுவலா உங்க மேல பயங்கர கோபத்துல இருந்தேன். ஆனா உங்களை பார்த்ததும் அந்த கோவம் எல்லாம் இருந்த இடம் காணாம போயிடுச்சு" என ஒரு பெண்குரல் ஒலிக்க, "இதை பாருடா....ஒரு சினிமா டயலாக்....யாரு இது???" என யோசனையுடன் அவர்களின் காரருகேயே நின்றிருந்தாள் தமிழ்.

"சரி சரி எதுவா இருந்தாலும் உள்ள போயி பேசலாம் வா" என ராம் கார் கதவை திறக்க, அதில் இருந்து அல்ட்ரா மாடர்ன் பெண்ணொருத்தி இறங்கினாள்.

இவள் அந்த பெண்ணை பார்க்க, அவர்கள் இருவரும் இவளை கவனிக்காமல் வீட்டின் உள்ளே சென்றனர்.

"அடப்பாவிகளா!!! இங்க ஒருத்தி நிக்கறது ஏதாவது ஒரு கண்ணுக்கு கூடவா தெரியல??? கஷ்டகாலம்" என புலம்பியபடி காரில் இருந்த பையையும் எடுத்து கொண்டு வீட்டிற்குள் சென்றாள்  தமிழ்.

அவள் உள்ளே செல்லும் போதே ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தனர் இருவரும். இவள் உள்ளே வருவதை கண்ட ராம் "தமிழ்செல்வி, இது நித்து. என் மாமா பொண்ணு. " என்றவன் "நித்து, இது தமிழ்செல்வி. என்..." அவன் சொல்லிமுடிக்கும் முன் இடையிட்ட நித்து "ஹ்ம்ம்...அழகா தான் இருக்கா....சாரி இருக்காங்க" என்றாள் தமிழை மேலிருந்து கீழாக பார்த்தபடி.

"சரி நித்து நீ ட்ராவல் பண்ணுனதுல டையர்டா இருப்ப. போயி பிரெஷ்ஷாயிட்டு வா" என ராம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.