(Reading time: 17 - 33 minutes)
Priyamaanavale
Priyamaanavale

அலங்கரித்து இருந்தாள்.

ஒரு ஸ்பூனை எடுத்து அதில் இருந்த ஒன்றை எடுத்து வாயில் வைத்தவன் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்தான். தமிழ்செல்வியோ தனக்குமாக ஒரு தட்டில் பரிமாறிக்கொண்டு அவனுக்கு எதிரே அமர்ந்தவள் அவன் சாப்பிட்டு விட்டு எதுவும் சொல்கிறானா என ஆர்வமாக அவனை பார்த்தாள்.

என்ன நினைத்தானோ அடுத்த நொடி தட்டில் இருந்த அனைத்தையும் நிமிடத்திற்குள் காலி செய்தவன் அருகே இருந்த டம்பளரில் இருந்த தண்ணீரை ஒரே மடக்கில் குடித்துவிட்டு மேலே அறையை நோக்கி ஓட, "சே எவ்ளோ கஷ்டப்பட்டு சமைச்சேன். ஒரு வார்த்தை நல்லா இருக்குனு சொல்லாம, அப்படியே முழுங்கிட்டு ஓடறதை பாரு" என அவனை மனதிற்குள் திட்டியவள் தன்னுடைய தட்டில் இருந்த அந்த சிவப்பு நிற உணவு பதார்த்ததில் ஒரு ஸ்பூனை எடுத்து வாயில் வைக்க, உள்ளே இறங்கிய உணவு அப்படியே எதிர் திசையில் வெளியே வர, அங்கிருந்த வாஸ் பேஸினை நோக்கி ஓடினாள் தமிழ்செல்வி.

முகத்தை கழுவி விட்டு வந்தவள் மேலே ராம் சென்ற திசையையே பார்த்தாள். "தெய்வ பிறவி போல, எப்படி இதை சாப்டாரு? அந்த விடியோல இருந்த மாதிரி தான செஞ்சேன். எது மாறுச்சு?" என புரியாமல் தலையை பிய்த்து கொண்டவள் அதற்க்கு மேல் அதை சாப்பிட முடியாமல் எல்லாவற்றையும் எடுத்து வைத்து பிரிட்ஜில் இருந்த பாலை சூடு பண்ணி குடித்தவள்  மேலே இருந்த அறைக்கு வந்தாள்.

அவனை பார்க்காதது போல வேகமாக உள்ளே நுழைந்தவள் அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்தாள். ஓரக்கண்ணால் அவனை பார்த்தாள். அவன் எப்போதும் போல ஏதோ ஒரு கேமில் ஈடுபாட்டோடு விளையாடி கொண்டிருந்தான்.

பசியோடு இருப்பவனுக்கு அப்படி ஒரு உணவை கொடுத்தது மனதிற்கு உறுத்தலாக இருந்தது தமிழ்செல்விக்கு.

மெல்ல எழுந்தவள் அவன் அருகே சென்று நின்றாள்.

"சாரி எனக்கு அவ்வளோ சமைக்க தெரியாது. வேணா பாக்கியம் அம்மாவை வர சொல்லட்டுமா?" என்றவளை நிமிர்ந்து பார்த்தவன் தன்னுடைய கையில் இருந்த லேப்டாப்பை மூடி வைத்தவன் எழுந்து நின்றான்.

"எனக்கு நைட் அவுட் சைட் புட் சாப்டா ஒத்துக்காது. அது தெரிந்து வேணும்னு தான இப்படி பண்ணுன. இப்படி பண்ணுனா நான் உடனே பாக்கியம் ஆன்டிய வர சொல்லிடுவேன்னு பிளான் போட்ருக்க. என்ன ஆனாலும் சரி. நீ தான் சமைக்கணும். ஆனா இந்த மாதிரி கோல்மால் வேலை எல்லாம் இல்லாம ஒழுங்கா சமைக்கணும்" என்று விட்டு அங்கிருந்து நகர,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.