(Reading time: 18 - 35 minutes)
Unakkum Enakkum thaan porutham
Unakkum Enakkum thaan porutham

அவள் சொல்லிக் கொடுத்திருந்தாலும் மகள் அதைப் பின்பற்ற வேண்டுமே என்ற கவலை எப்போதுமே உண்டு.

அதற்கேற்றாற்போல் மகளுக்குத் தோழிகளும் இல்லை. ஒருவேளை அவள் தன் வகுப்பில் உள்ள மாணவ, மாணவிகளிடம் திமிராய் நடந்து கொள்கிறாளோ? அதனால்தான் அவள் யாரிடமும் நட்பு பாராட்டாமல் இருக்கிறாளோ? என்ற கவலையில் இருந்தவளுக்கு தங்கள் வீட்டு ஓட்டுநரின் மகளோடு மகள் நட்பு பாராட்டியது ஆச்சர்யமாக இருந்தது.

அவள் வடிவேலிடம் சுகன்யாவையும் அவர்களோடு அழைத்துச் செல்லச் சொன்னாள். முதலில் தயங்கினாலும் வடிவேலு தன் எஜமானியம்மாள் கூறியதை தட்டவில்லை.

சுகன்யாவிற்கு முதலில் கார்ச்சவாரியை நினைத்து மகிழ்ச்சிதான். இருந்தாலும் அவளை அழைத்து வருமுன்னே கண்டித்துதான் அழைத்து வந்திருந்தான்.

"இதப் பாரு சுகன்யா. அவங்க எல்லாம் பெரிய இடம். ஏதோ நல்லவங்களா இருக்கப் போய் உன்னையும் அவங்க வீட்டுப் பொண்ணோடு அழைச்சுக்கிட்டுப்போக அனுமதிச்சிருக்காங்க. நீ அதிகமா உரிமை எடுத்துக்கக் கூடாது."

தந்தையின் பேச்சைக் கேட்டு சுகன்யா மிகவும் கவனமுடன் நடந்துகொண்டாள்.

மகாலட்சுமிக்கு அவளின் ஒதுக்கம் ஏமாற்றத்தைத் தந்தது.

"வேலு மாமா. சுகன்யா ஏன் என்கிட்ட பேச மாட்டேன்கிறாள். அவளை என்னிடம் பேசச் சொல்லுங்கள்." என்று பஞ்சாயத்தை அவனிடமே கொண்டு சென்றாள் மகாலட்சுமி.

மற்றவர்களிடம் மரியாதையாக பேசிப் பழக வேண்டும் என்று வளர்மதி கண்டிப்புடன் கூறியிருந்தாள். அதனால் அவள் வடிவேலுவை வேலு மாமா என்றுதான் அழைப்பாள்.

இறுதியில் மகாலட்சுமியின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு வடிவேலுவிடம் வந்தது. அவனும் தன் மகளிடம் மகாலட்சுமியிடம் முன்புபோல் ஒதுங்கியிராமல் பழகச் சொன்னான்.

சுகன்யா ஒரு ஓட்டை வாய். பேசினால் பேசிக்கொண்டேயிருப்பாள். இப்போது தந்தையிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் அவள் தன் திறமையை எடுத்துவிட ஆரம்பித்துவிட்டாள். அவளின் வெகுளித்தனம் மகாலட்சுமிக்கும் பிடித்திருந்தது.

உணவு இடைவேளையில் மகாலட்சுமி கொடுக்கும் உணவு வகைகளை வாங்கி உண்ண தயங்குவாள்.

தன் வீட்டில் இப்படி எல்லாம் உணவு சமைத்து சாப்பிடுவதில்லை என்றும் அவர்களை விட்டுவிட்டு அவள் மட்டும் உண்பதற்கு அவளுக்கு மனம் வரவில்லை என்றும் கூறிய அவள் அன்பைக் கண்டு நெகிழ்ந்துபோனாள் மகாலட்சுமி.

"இப்போதான் உங்கப்பா வேலை பார்க்கிறாங்கதானே. இனி உங்கம்மாவை நல்லா சமைக்கச்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.