(Reading time: 18 - 35 minutes)
Unakkum Enakkum thaan porutham
Unakkum Enakkum thaan porutham

"நீங்க எப்படி போய் எத்தனை நாள் வெளியில் தங்க முடியும்? யாராவது கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்? இப்பன்னா நம்ம மகள் பட்டணத்திற்குப் படிக்கப் போயிருக்கிறாள் என்று சொல்லிவிடலாம்."

"என்னவோ போ லட்சுமி. அதுக்காக புள்ளையை இரண்டு வருசமா ஊருக்கே வரவேண்டாம்னு சொல்லிட்டியே."

"அவளைப் பிரிஞ்சு இருக்கிறதுக்கு நாம பழகிக்கனும்னுதாங்க அப்படி செய்தேன். அவளும் நம்மை எல்லாம் விட்டுப் பிரிஞ்சிருக்கனும்."

"ஏன் அவள் நம்மை விட்டுப் பிரிஞ்சிருக்கனும்?"

"அப்புறம் அவள் கல்யாணம் ஆகிப் போனால் அவளைப் பிரியறது கஷ்டமா இருக்குமே."

"ஏன் நம்ம மகளைப் பிரியனும்?"

"என்னங்க இப்படி கேட்கறீங்க? சுய கௌரவம் பார்க்கும் எந்த ஆண்பிள்ளையும் வீட்டோட மாப்பிள்ளையா இருக்கிறதுக்கு ஒத்துப்பானா? அப்படியே வந்தாலும் ஊரார் நாம மாப்பிள்ளையை  விலைக்கு வாங்கிட்டோம்னுதான் சொல்லுவாங்க. அப்படி வர்றவங்களும் லட்சுமியோட சொத்துக்காகத்தான் வருவாங்க. அவ மேல் உண்மையான பாசம் வப்பாங்களா? நம்ம பொண்ணு கஷ்டப்பட்டா நம்ம மனசு தாங்குமா?"

"இப்ப எதுக்கு தேவையில்லாமல் கண்டதையும் நினைச்சுக் கவலைப்படறே? நம்ம பொண்ணுக்குத்தான் தங்கம்போல் மாப்பிள்ளை அமைஞ்சாச்சே. அதுவும் அவங்க ரெண்டு பேரோட ஜாதகமும் அத்தனை பொருத்தமா இருக்குன்னு நம்ம ஜோசியரே சொல்லிட்டாரே. லட்சுமிக்கும் கல்யாண யோகம் வந்துடுச்சு. அவ பரிட்சை முடிச்சு வந்த உடனே திருவிழாவும் முடிஞ்சுடும். அதற்கப்புறம் கல்யாணம்தானே?

"இரண்டு பேரும் கல்யாணம் ஆகி நல்லபடியா வாழ ஆரம்பிச்சாதாங்க என் மனசு நிம்மதியா இருக்கும்."

"இப்பவும் நீ லட்சுமியை புரிஞ்சுக்கலையா? அவ எந்த இடத்திலும் சமாளிச்சுக்குவா. நீயே அவங்க ரெண்டு பேரும் வாழப் போறதை பார்க்கப்போறேதானே?"

"அந்த நம்பிக்கையில்தான் நானும் இருக்கேங்க."

"அப்புறமும் ஏன் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கே?"

கணவனின் சமாதானத்தில் அப்போது அமைதியானாலும்  அந்தத் தாய் மனம் தவிப்பதை மட்டும் நிறுத்தவில்லை.

ல்ல உறக்கத்தில் இருந்து கண்விழித்தாள் சுகன்யா. திடீரென்று தோழியிடம் இருந்து சிரிப்பு சத்தம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.