(Reading time: 11 - 21 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

அவன் கருத்துகளை ஏற்றுக் கொள்ளாமல் பேசுவது அவனுக்கு பிடிக்காது. ஏனென்றால் கற்றுக் கொடுக்கும் அவர்களை விட இவனுக்கு அறிவு அதிகம்.

ஏதாவது ஒரு ஆசிரியர் அவன் கருத்துகளை தவறு என்று சொல்லி அவனிடம் எதிர்த்து வாதிட்டால் அவர்கள் கருத்துக்களை தவறு என்று நிரூபித்து விடுவான். அதனால் யாரும் அவனிடம் எந்த வம்பும் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.

இப்போது கூட வீட்டிற்கு சென்றதும் தன் ஆபீஸில் ஒரு முக்கியமான ப்ராஜக்டை ஆரம்பிக்க வேண்டும் என்றுதான் வேகமாக கிளம்பினான். ஆனால் கார் இன்னும் அவனை அழைத்து செல்ல வரவில்லை என்பதை அறிந்தவுடன் மிகவும் டென்ஷன் ஆகிட்டான்.

தன் பிசினஸ் பற்றிய சில காரியங்களை யோசித்துக்கொண்டிருந்தவனின் கவனத்தைக் கலைத்தது வாட்ச்மேன் குரல். தம்பி கார் வந்துவிட்டது என்று சொல்ல யோசனையோடு தன் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு நடந்தான்.

 எதிர்பாராதவிதமாக அவன் மீது யாரோ வேகமாக முட்டிக்கொள்ள சென்ஸ் இருக்கா உனக்கு என்று கத்திவிட்டான்.

 ஏன் உனக்கு இல்லையா என்ற குரலில் நிமிர்ந்து எதிரில் நின்றவளை பார்த்தான். அவள் போட்டிருந்த ஸ்கர்ட் அவள் இன்னும் எட்டாம் வகுப்பை தாண்ட வில்லை என்பதை அவனுக்கு உணர்த்தியது.

 தன்னை எதிர்த்து கேள்வி கேட்கும் அவளை ஒருமுறை ஆராயும் பார்வை பார்த்தான் ராகவேந்திரன்.

 இப்படி தான் வந்து இடிப்பியா என்று அவன் கோபமாக கேட்க அவளோ ஏன் நீங்க மட்டும் இடிக்கலையா என்று பதில் கேள்வி கேட்டாள்.

 இதுவரை அவனை யாரும் எதிர்த்து பேசியது இல்லை. தன் பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் அவன் பெரிய பணக்காரன் என்று தெரிவதால் அவனிடம் நட்பு கொள்ளவே துடித்துக் கொண்டிருந்தார்கள்.

 ஆனால் இன்று ஒரு சிறுப்பெண் முதன்முறையாக தன்னை எதிர்த்து கேள்வி கேட்பது பார்த்ததும் அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

அவளோ இயற்கையாகவே சற்று பெரிதாக இருந்த கண்களை இன்னும் விரித்து அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

ஏன் முறைக்கிற போக வேண்டியது தானே என்று அவன் கேட்க அவளோ கீழே விழுந்து கிடக்கிற புக்கை யார் எடுத்துத் தருவார்கள்... மரியாதையாக எடுத்து தா என்று சொல்ல அவனுக்கு இன்னும் கோபம் அதிகமாகியது.

 

16 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.