(Reading time: 11 - 21 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

என்று திட்டிக்கொண்டே வந்தாள்.

 அவரோ அம்மாடி குழலி நான் சொல்றது காதுல விழல என்று மறுபடியும் கேட்க அப்போதுதான் அவளுக்கு உரைத்தது. அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனையே நினைத்து திட்டிக் கொண்டிருப்பது அவளுக்கு புரிந்தது.

 பழக இன்னும் கொஞ்ச நாள் ஆகும் என்று சொல்ல அவரோ ஆமா ஆமா போகப் போக தான் பழகும்.  நல்லா படிக்கணும் என்று வாஞ்சையோடு அவள் கண்ணத்தை தட்டி விட்டு செல்ல சரி தாத்தா நல்லா படிப்பேன் என்று சொல்லிவிட்டு  அந்தச் சிறுமி பூங்குழலி.

பூங்குழலி தான் அவளது பெயர்‌. தாய் தந்தை எல்லாரையும் இழந்து தாத்தாவுடன் வசித்தவள் தாத்தாவின் இறப்பிற்குப்பின் இந்த தெரெசா இல்லத்தில் அடைக்கலம் புகுந்து விட்டாள்.

 அந்த இல்லத்தைப் பார்வையிட வந்த வெளிநாட்டு பயணிகளின் கவனத்தில் குழலியின் அறிவுக்கூர்மை பட அந்த வெளிநாட்டு தம்பதியினர் அவளை ரொம்பப் பிரபலமான பள்ளியில் சேர்த்தனர்.

 அவளுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்ததோடு அவள் படிப்பிற்கு தேவையான அனைத்து காரியங்களையும் தாங்கள் பார்த்துக் கொள்வதாக சொன்னார்கள்.

 அதனால் திரேசா இல்லம் அனுமதி வழங்க சகல ஃபார்மாலிட்டீஸ் முடித்து இன்றுதான் முதன் முதலாக அவள் அந்த பள்ளிக்கு சென்று இருந்தாள்.

 ஆனால் முதல் நாளிலேயே ஒருவன் அவளிடம் வம்பு செய்ததால் அவளுக்கு கோபம் கோபமாக வந்தது. என்னை எப்படி இவன் சென்ஸ் இருக்கா என்று கேட்பான் என்று நினைத்தவள் அறிவுகெட்டவன் அறிவு கெட்டவன்... ஆள் தான் வளர்ந்து இருக்கிறான். ஆனால் அறிவு வளரவில்லை என்று சொல்லி திட்டி கொண்டேன் தான் தங்கியிருக்கும் அறைக்குள் நுழைந்தாள் பூங்குழலி.

நெட்ட கொக்கும் குள்ள வாத்தும் சேர்ந்து இன்னும் என்னலாம் சண்டை போடுகிறார்கள் என்று பார்ப்போம்.

மும்பை..

பாஸ் உங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து ஃபோன் வந்து இருக்கிறது.

அந்த யூஸ்லெஸ் பெல்லோஸ் கிட்ட ஏதாவது முக்கியமான விஷயமா என்று நீ கேளு... முக்கியமான விஷயம் என்றால் மட்டும் என்கிட்ட தா என்று சொன்னான் அந்த பாஸ்...

சற்று தூரம் தள்ளி சென்றவன் எதிர்முனையில் இருந்த அவரிடம் ஏதோ பேசிவிட்டு உடனே அழைப்பை துண்டித்து விட்டு அந்த பாஸின் முன்னால் வந்து நின்றான்.

பாஸ்

 

16 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.