(Reading time: 14 - 27 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 02 - ஜெபமலர்

மும்பை....

பாஸ் உங்க கிட்ட ஒன்று கேட்கலாமா.

ம்ம்...

எட்டு வருஷமா யாரோ ஒரு இறந்துபோன ஆள தேடுகிறீர்கள் என்று தெரியும். ஆனா இப்ப ஒரு வாரமா ரொம்ப தீவிரமா தேடுகிறீர்கள். அதற்கான காரணம் தெரிஞ்சுக்கலாமா பாஸ்...

காரணம் சொல்ல வேண்டியது என் வேலையும் அல்ல. காரணம் தெரிஞ்சுகிறது உன் வேலையும் இல்லை. சொன்னதை மட்டும் செய் புரிஞ்சுதா..

நல்லா புரிஞ்சுது பாஸ்.

ம்ம்... நீ கேட்டுட்டேன்னு சொல்றேன். 

தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ பாஸ். சொல்லுங்க சொல்லுங்க.

உனக்கு பெர்முடா முக்கோணம் தெரியுமா...

ஆஹா இவர் ஏதோ கேட்கிறாரே... தெரியாதுனு சொன்னா அதே தெரியல, நான் சொல்றது உனக்கு எங்கே புரிய போகுதுனு சொன்னாலும் சொல்லுவார். அதனால தெரியும்னு சொல்லுவோம். சொல்லிட்டு அப்புறம் இந்த பெருமுடா னா என்னனு தெரிஞ்சுக்குவோம்.

என்னடா யோசனை பலமா இருக்கு. தெரியுமா தெரியாதா...

தெரியும் பாஸ் தெரியும் தெரியும்..

நல்லா தெரிஞ்சது போ... நீ சொல்ற தெரியும்லயே உனக்கு தெரியலன்னு தெரியுது.

பாஸ் தெரியாதுதான் பாஸ். ஆனால் விஷயத்தை சொல்லுங்க பாஸ். நான் யார்கிட்ட போய் சொல்ல போறேன் என்றான் சாரங்கன்.

சரி சொல்றேன். பெர்முடா முக்கோணத்தில் ஒரு பெரிய ரகசியம் இருக்கு. அது எல்லா நேரத்திலும் வெளியே வராது. அதற்காக பல வருஷம் கூட காத்திருக்கணும். இப்போ நாம தேடிட்டு இருக்கோமே ஒரு பொண்ணு. அந்த பொண்ணுக்கும் அந்த ரகசியத்தோடு சம்பந்தமிருக்கு. இவ்வளவு நாள் இறந்து போய் விட்டாள் என்று விட்டாச்சு. ஆனா இப்போ அந்த பொண்ணு உயிரோட இருக்கிறாளோ என்று ஒரு சந்தேகம். உயிரோட இருந்தா தேடி கண்டுபிடிச்சு...

தேடி கண்டுபிடிச்சு அந்த ரகசியத்தை தெரிஞ்சுக்கலாமா பாஸ்.

அட போடா. தேடி கண்டுபிடிச்சு மொத வேலையா அவளை தீர்த்து கட்டணும். அதுக்காக தான் தேடிட்டு இருக்கோம்.

ஆ... வில்லங்கமா இருக்கிறதே என்று யோசித்தவன் அது என்ன ரகசியம். உங்களுக்கு தெரியுமா பாஸ்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.