(Reading time: 14 - 27 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

வேற்றுக்கிரகவாசிகள், மாயசக்தி, மந்திரசக்தி, துஷ்ட சக்தி இங்கு உலாவி கப்பல்கள் விமானங்களை  மூழ்கச் செய்கிறது என்றெல்லாம் கூறிக்கொண்டார்கள் சிலர்.

 எது எப்படியோ அந்த இடத்தில் மூழ்கிய விமானங்கள் கப்பல்கள் இவற்றின் ஒரு துண்டு கூட இதுவரையிலும் கிடைக்கவில்லை அதுதான் உண்மை.

பூமியில் சுமார் 7,00,000 சதுர கிலோமீட்டர்களுக்கு  பரந்து விரிந்து காணப்படும் கடல்பகுதி தான் பெர்முடா முக்கோணம். பல ஆண்டுகளாக பெர்முடா முக்கோணத்தை பற்றிய சரியான தெளிவை பெற முடியாமல் இருந்து வந்தது.

சராசாரி கடல் அலை அழுத்தத்தை விட பெர்முடா முக்கோணத்தில் 180 சதவிகிதம் அதிகமாக உள்ளது. இந்த அழுத்தமே கப்பல் மற்றும் படகுகள் நொறுங்குவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. 

பெர்முடா முக்கோண கடற்பரப்பில் நிலவும் சீதோஷன நிலை தான் விமானங்கள் பறப்பதற்கு ஏதுவாக இல்லை என்று கூறப்படுகிறது.

இயல்பாகவே பெர்முடா முக்கோண பகுதியில் ராட்சச அலைகள் எழுப்புகின்றன. மற்ற கடல் பகுதிகளில் சுனாமி உள்ளிட்ட சீற்றத்தின் போது கூட இந்த அளவுக்கு அலைகள் உயர எழுந்தது இல்லை. 

ஆனால், பெர்முடா முக்கோண பகுதியில் எப்போதும் சுமார் 100 அடி அதாவது 30 மீட்டர் உயர்த்துக்கு அலை எழும்பும்.  இதே உயரத்தில் தான் எப்போதும் அலை அடிக்கிறது. அதுவே காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சாரங்கனின் மனதில் இருந்த பெர்முடா முக்கோணத்தை பற்றிய சிந்தனையை அவன் கனவிலும் வந்தது.

அதேநேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பாஸ்க்கு அழைப்பு வந்தது.

 தூக்க கலக்கத்தில் மொபைலை எடுத்துப் பார்த்தவன் அழைப்பது அண்ணா என்று தெரிந்ததும் வேகமாக எழுந்து அமர்ந்தான்.

 சொல்லுங்க அண்ணா... இந்த நேரத்தில் அழைத்து இருக்கீங்க. 

நாம பேசுவதற்கு நேரம் காலம் இருக்குதா. வெட்டியா சுற்றி வரவனுக்கு தான் தூங்குறதுக்கு ஒரு காலம். வேலை செய்ய ஒரு காலம். நாம எப்பவும் விழிப்பாக தான் இருக்கணும். புரிஞ்சுதா... நான் நான் புரிஞ்சு கிட்டேன் என்றான் பாஸ்.

ஓகே. இப்போ நான் சொல்ல போறதை கவனமாக கேளு.

சரி அண்ணா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.