(Reading time: 14 - 27 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

8 வருடத்திற்கு முன்பாக பெர்முடா முக்கோணத்தின் எல்லையை ஒட்டிய பகுதியில் எரிந்து உடைந்து சிதறிய கப்பல் இருக்குதுல.

ஆமாண்ணா ஆமாண்ணா... 

எரிந்துகொண்டிருந்த கப்பல்ல இருந்த அந்த பெண் கப்பலுடைய ஒரு மரத்துண்டை பிடிச்சுக்கிட்டு தப்பிக்க முயற்சி செய்தாள். அப்போது அவளை டிராக் செய்வதற்காக அவன் மேல டிராக் சூட்டை செலுத்தினோம்.

 ஆனால் அது குறி தவறி அந்த மரத்துண்டின் மேலே பதிந்துவிட்டது. அந்த மரத்துண்டு சிக்னல் கடைசியா தமிழ்நாட்டுக்கு நேர நகர்ந்து சென்று இருக்கு. அது சென்ற ஆங்கிளில் அதை ஆய்வு செய்தபோது அது நிச்சயமாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி பக்கமாக தான் சென்றிருக்கவேண்டும்.

 

அந்தப் பெண் இறந்திருந்தால் கடற்கரையோரமாக தான் கரை ஒதுங்கி இருக்கவேண்டும். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி அவள் உயிரோடு இருந்தால் அந்தப் பகுதியில் தான் எங்காவது வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். அதனால் அந்தப்பகுதியில் உன் வேலைய தீவிரமாக தொடங்கு. பழைய ஆட்கள் எல்லாருக்கும் பணத்தை செட்டில் பண்ணி விட்டு தேவைப்படும்போது அழைக்கிறோம் என்று சொல்லி அனுப்பி விடு. நம்ம பசங்கள தூத்துக்குடிக்கு அனுப்பி வை.

 நம்ம பசங்களுக்கு தூத்துக்குடி பற்றி எதுவுமே தெரியாதே...

 எதுவுமே தெரியாதது தான் நமக்கு நல்லது. செய்ய வேண்டிய வேலையை மட்டும் சொல்லி ஒவ்வொரு இடத்தையும் அவங்களுக்கு அனுப்பிவிடு.

நம்ம பசங்கள இந்த விஷயத்தை பத்தி விசாரிக்கிற மாதிரி அனுப்பாத. ஒவ்வொரு ஏரியாக்கும் ஒவ்வொரு ஃபேமிலி அனுப்பு. அவங்க அங்கேயே தங்கி இருக்கட்டும். அங்கு கடலுக்கு போகிற குடும்பங்களோடு நெருங்கிப் பழகட்டும். அப்பதான் நம்மளால சீக்கிரமா கண்டுபிடிக்க முடியும். யாருக்கும் நம்ம மேல சந்தேகம் வராத மாதிரியும் பார்த்துக்கொள். மற்ற வேலையை அவங்கள பார்க்க சொல்லு.

அண்ணா... ஒருவேளை அந்த பொண்ணு இறந்து கூட போயிருக்கலாம் இல்ல..ஏதாவது மீன் கூட சாப்பிட்டு இருக்கலாம். அல்லது இறந்து உள்ளேயே மூழ்கிப் போயிருக்கலாம். வெளியில் வரமுடியாமல்  பாடி மாட்டி இருந்திருக்கலாம். இன்னும் அந்தப் பெண் உயிரோடு தான் இருப்பாள் என்று நம்புகிறீர்களா....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.