அவளை கலாய்க்க அவளோ முறைத்துவிட்டு தன் பேக்கை எடுத்தாள்.
பேக்கை எடுத்து தோளில் மாட்டியவள் அங்கிருந்து ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தாள்.
அதற்குள் அவனோ பேசிக்கிட்டே இருக்கேன். நீ உன் இஷ்டத்துக்கு கிளம்புற... நில்லு என்று சொல்லி அவள் கையை பிடித்து இழுக்க முயற்சி செய்தான்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த ராகவ்விற்கு கோபம் தலைக்கேறியது. வேகமாக ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தவன் அதே இடத்தில் நின்று விட்டான். ஆனால் அவன் கண்கள் பூங்குழலியின் மீது பதிந்து இருந்தது.
அந்த புதியவன் குழலியின் கையை பிடித்து இழுக்க முயற்சி செய்ததும் குழலி ஓங்கி அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டாள். அவள் அடித்த வேகத்தில் அவன் தலை சுற்ற காது விங்ங்ங் என்க அப்படியே நின்று விட்டான்.
சிறிது நேரத்தில் அவன் கன்னத்தை பிடித்து கொண்டு அந்த இடத்தில் அப்படியே உட்கார்ந்து விட்டான். அதை பார்த்த ராகவ்விற்கு சற்று ஆச்சரியமாக இருந்தது.
பார்ப்பதற்கு குள்ளமாக ஒல்லியாக இருக்கும் இந்தப் பெண்ணின் கையில் இவ்வளவு வலிமையா என்று சற்று அதிர்ந்து விட்டான்.
அடிபட்டவன் கன்னத்தை தடவிக் கொண்டே தன் வகுப்பிற்கு சென்று விட ஸ்போர்ட்ஸ் கிரவுண்டுக்கு சென்றான் ராகவ்.
சற்று நேரத்தில் குழலியும் அங்கு சென்று பெண்கள் பகுதியில் விளையாடுவதை கவனித்துக் கொண்டிருந்தாள். நேரம் கடந்தது. பெல் அடிக்கவும் அவரவர் வகுப்பிற்கு சென்றனர். வகுப்பு ஆரம்பித்ததும் ராகவ்வும் குழலியை மறந்துவிட்டான்.
வீட்டிற்கு வந்த ராகவ் ராமு காபி ரெடியா என்று கேட்டுக்கொண்டே தன் அறைக்கு சென்று பிரஷ்ஷாக வந்தான். அவன் வீட்டிற்குள் நுழையும் போதே வீட்டில் அம்மா இல்லை என்பதை அறிந்துகொண்டான்.
அம்மா இல்லாத அன்றெல்லாம் ராமுவிடம் கதை பேசிக் கொண்டிருப்பது ராகவ்வின் வழக்கம். அதனால் அன்றும் பேசுவதற்காக ராமுவிடம் அமர்ந்தான் ராகவ்.
முகத்தில் சிறு புன்னகையுடன் காபியை அருந்திக் கொண்டிருந்த ராகவ் விடம் தம்பி ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல... ஏதாவது புது ப்ராஜெக்ட் சக்சஸ் ஆகி இருக்கா என்று கேட்க அவனோ இல்லை என்று தலையசைத்தான்.
ராமு மீண்டும் யோசனையுடன் ராகவ்வை பார்த்து கொண்டு இருக்க அவனோ ராமு இன்றைக்கு ஸ்கூலில் என்ன நடந்தது தெரியுமா என்று சொல்லி பூங்குழலி தன்னிடம் வம்பு செய்தவனை அடித்ததை பற்றி சுவாரஸ்யமாக ராமுவுடன் பகிர்ந்துகொண்டான்.