(Reading time: 14 - 27 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

......

சாரி பாஸ் சாரி பாஸ் முறைக்காதீங்க நான் போய் என் வேலைய மட்டும் பார்க்கிறேன் என்று அவன் விடைபெற்றுக் கிளம்பினான்.

ஆனால் அவன் மனதில் பெர்முடா முக்கோணம் என்றால் என்ன என்றும் அதை தெரிந்து கொள்வதில் ஆர்வமும்  அதிகமாக இருந்தது. எப்படியாவது பெர்முடா முக்கோணம் பற்றி பாஸிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினான். அதற்கான சமயம் பார்த்து காத்து இருந்தான் சாரங்கன்.

(சரி வாங்க... பெர்முடா முக்கோணம் என்றால் என்ன-ன்னு நம்ம கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.)

பெர்முடா முக்கோணம் என்பது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் 

மேற்குப்பகுதியில் உள்ள மர்மமான கடல் பகுதி. பெர்முடாவில் இருந்து மியாமி, பின் ஃப்ளோரிடாவில் இருந்து புவேர்ட்டோ ரிக்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் முக்கோணப்பகுதி தான் பெர்முடா முக்கோணம்.

இந்த கடல் பகுதிக்கு செல்லும் கப்பல்களையும் படகுகளையும் ஏன் அந்த நிலப்பரப்பிற்கு மேலே பறக்கும் விமானங்களையும் கூட அந்த கடல் பகுதி முழுங்கி விடுகிறதாம்.

 பெரிய மீன்களும் ஆக்டோபஸ்களும் கப்பல்களை முழுங்கி விடுகின்றன என்றும், வேற்று கிரக மனிதர்கள் கப்பல்களையும் விமானங்களையும் கைப்பற்றி விடுகிறார்கள் என்றும் வதந்திகள் பரவின. செய்தித்தாள்களில் கூட செய்திகள் பேசப்பட்டுக் கொண்டே இருந்தன.

 ஏனென்றால் அங்கு சென்ற எந்த கப்பலும், விமானமும் திரும்பி வராதது அதிர்ச்சி அளித்தது தான் காரணம். ப்ளாரிடாவிலிருந்து சென்ற ஐந்து விமானங்கள் காணாமல் போயிற்று. அந்த விமானங்களை தேடிச்சென்ற மூன்று விமானங்கள் கூட மர்மமாக மறைந்து போயிற்று.

 சிறிய கப்பல்கள் காணாமல் போகும். பெரிய கப்பல்கள் காணாமல் போகாது என்று பலர் செய்திகள் சொல்லிக் கொண்டிருந்தனர்.

 ஆனால் திடீரென்று எஸ்எஸ் மரைன்,  யுஎஸ்எஸ் சல்பர் க்யூன் என்ற இரண்டு பெரிய கப்பல்கள் அங்கு சென்றவை காணாமல் போயிற்று.

அந்தப் பகுதியில் ஏதோ ஒரு காந்த சுழல் நிலவுகிறது. அது கப்பல்கள் விமானங்கள் ஆகிவற்றை இழுத்துச் சென்று விடுகிறது என்று ஒரு சாரார் சொல்லிக் கொண்டனர்.

 இல்லை... இல்லை... அங்கு எரிமலை இருப்பதால்தான் இப்படி நடக்கிறது என்று மற்றொரு சாரார் சொல்லிக்கொண்டனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.