(Reading time: 14 - 27 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

எந்த ஒரு விஷயத்தில் இறங்கினாலும் அதை பற்றி முழுவதுமாக ஆழமாக தெரிந்து கொள்ளனும். இன்னைக்கு நாம அசால்டா விட்டுட்டா எதிர்காலத்தில் அது நமக்கே ஆபத்தாக முடியும். ரொம்ப கவனமா இருக்கணும். புரிஞ்சுதா என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து விட்டான்.

சாரங்கனுக்கு அழைத்த பாஸ் என்பவன் அவனை உடனே வருமாறு கட்டளையிட்டான்.

சென்னை......

காலை எழுந்ததும் தனது ஸ்போர்ட்ஸ் பிராக்டீஸ் காக வேகமாக கிளம்பினான் ராகவ். பிஸ்னஸ் தவிர அவன் கொஞ்ச நேரம் செலவழிப்பது ஃபுட்பால் காக மட்டுமே.

 வேகமாக கிளம்பி வெளியே வந்தவன் ராமு தயார் செய்து வைத்திருந்த காலை உணவை சாப்பிட்டுவிட்டு மதிய உணவையும் எடுத்துக் கொண்டு காரில் ஏறினான்.

தெராசா இல்லத்திலிருந்து கிளம்பிய பூங்குழலி வாசலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ஆசீர்வாதம் தாத்தாவிடம் தாத்தா நான் போயிட்டு வரேன்... பாய்... என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். அவரும் அவளுக்கு கையசைத்து விடைகொடுத்தார் .

ஸ்போர்ட்ஸ்ல் அவளை சேர்த்து விட்டிருந்ததால் காலையிலேயே பள்ளிக்கு வந்திருந்தாள் குழலி. நேற்று ராகவை சந்தித்த அந்த மரத்தடியில் வந்தவள் நெட்ட கொக்கு நெட்ட கொக்கு என்று மறுபடியும் திட்டிவிட்டு உன்னைவிட நான் வளர்ந்து காட்டுகிறேன். பாரு என்று சொல்லிவிட்டு மரத்தின் ஒரு கிளையை குதித்து பிடித்தாள்.

 ஆனால் ஒரு சிறு இடைவெளியில் அவளால் அந்தக் கிளையை பிடிக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் அவள் குதித்து முயற்சி செய்து கொண்டிருந்தாள். 

 ‎

அப்பொழுது உள்ளே வந்த ராகவ் குள்ள வாத்து என்ன பண்ணுது. எப்படியும் இது வளரப்போவதில்லை என்று சொல்லிவிட்டு தன் வகுப்பறைக்கு நுழைந்தான்.

டேய்... யாருடா இந்த பொண்ணு புதுசா இருக்கா. வா அருகில் போய் பார்க்கலாம் என்றபடியே இரண்டு பேர் பூங்குழலியின் அருகில் வந்தனர்.

 ஸ்போர்ட்ஸ் கிரவுண்டுக்கு போக வெளியே வந்தவன் கண்களில் அவளை சுற்றி நின்ற இரண்டு பேரும் தெரிந்தார்கள். அடடா... இவர்கள் இரண்டு பேரும் இருக்கும் இடத்தில் பிரச்சனை இல்லாமல் இருக்காதே என்று நினைத்தவன் அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக அவர்களை நோக்கி சென்றான்.

பூங்குழலி குதித்து குதித்து கிளையை பிடிக்க முயற்சி செய்து கொண்டிருப்பதை பார்த்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.