(Reading time: 14 - 27 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

 தம்பி, அந்த பொண்ணு உங்க பிரண்டா... 

இல்ல ராமு... நேற்று தான் முதல் தடவையா அவளைப் பார்த்தேன் என்றவன் ஆள வச்சு சாதாரணமாக எடை போடக்கூடாது என்பது சரியாகத்தான் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ராகவ்விற்கு அழைப்பு வந்தது.

 அதனால் அவன் ராமுவிடம் விடை பெற்று சென்று விட்டான்.

 ஆனால் ராமுக்கு சற்று குழப்பமாகவும் சற்று யோசனையாகவும் இருந்தது. இதுவரை நண்பர்கள் என்றோ தோழிகள் என்றோ யாரையும் பற்றி பேசாதவன் இன்று முதன்முதலாக ஒரு பெண்ணை பற்றி பேசுகிறானே... யாராக இருக்கும் அவள் என்ற யோசனையுடன் அமர்ந்திருந்தான் ராமு. 

சற்று தொலைவில் போனில் பேசிக்கொண்டு இருந்தான் ராகவ். யோசனையுடன் அமர்ந்திருந்த ராமுவை பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தவன் யோசனையுடன் அமர்ந்திருந்த ராமுவின் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்ததையும் கவனிக்கத் தவறவில்லை. 

அவனுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து ராமு சிரித்து ராகவ் பார்த்ததே இல்லை. முதன் முறையாக அவன் சிரிக்கவும்  ராகவ்விற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

தான் சொன்னதை நினைத்து தான் ராமு சிரிக்கிறாரா... அப்படி யோசித்து சிரிக்கும் அளவிற்கு என்ன இருக்கிறது என்ற யோசனையுடன் தன் ஆபீசுக்கு விரைந்தான் ராகவ்.

தொடரும் 

Go to Unakkaagave uyir vazhgiren story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.