(Reading time: 14 - 27 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

இருவரில் ஒருவன் பார்ரா ... முயல் குட்டி தாவி தாவி குதிக்கிறதே என்றான்.

 அவன் தன்னை கிண்டல் செய்கிறான் என்று தெரிந்த போதும் விடாமல் தன் வேலையை செய்து கொண்டிருந்தாள் பூங்குழலி. 

அவள் அருகில் வந்தவன் ஹே... முயல்குட்டி என்றான்.

 அவள் திரும்பி பார்க்காததால் அவள் முன்பாக வந்து நின்றவன் டேய்... இது முயல்குட்டி இல்லடா. காக்கா குஞ்சு என்றான்.

 தன் வேலையை நிறுத்திவிட்டு அவனையே முறைத்துக் கொண்டிருந்தாள் பூங்குழலி. 

இதை கவனித்துக் கொண்டிருந்த ராகவுக்கு அவர்கள் இருவர் மீதும் கோபம் வந்தது. ஆனாலும் இந்த குள்ள வாத்து என்னதான் செய்கிறது... பார்க்கலாம் என்று அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏய்... பன்றி குட்டி, நான் காக்கா குஞ்சா இல்லன்னா முயல்குட்டியானு உன்கிட்ட வந்து கேட்டேனா. வேலையை பாத்துக்கிட்டு போடா என்றாள்.

 என்ன என்கிட்டயே இவ்வளவு திமிரா பேசுற என்றான்.

நீ என்ன பெரிய பருப்பா என்றாள்.

ஏய் குள்ள கத்திரிக்கா ஒழுங்கா பேசு இல்ல... நடக்கிறதே வேற ‌

 வாடா... வா நீயா வந்து சும்மா நிக்கிற என் கிட்ட வம்பு இழுப்ப. அத கேட்டுட்டு நான் வாய மூடிக்கிட்டு போவேனு நினைச்சியோ என்று பதிலுக்கு பதில் பேசினாள் குழலி.

 உன்ன நான் இதுக்கு முன்னால இங்க பார்த்ததில்லையே.. நியூ அட்மிஷனா என்றான் அவன் மீண்டும் நக்கலான சிரிப்புடன்.

 ஏன் ...நியூ அட்மிஷன் இங்க நிக்க கூடாதா என்ன என்றாள் அவளும் பதிலுக்கு.

 பாருடா... பதிலுக்கு பதில் பேசுது இந்த காக்கா குஞ்சு என்று சொல்ல... என் பேரு பூங்குழலி மரியாதையா பெயரை சொல்லி கூப்பிடு. இல்லைன்னா என்ன நடக்கும்னு தெரியாது என்று அவள் சொல்ல அப்படி என்னதான் நடக்கும், காட்டு பார்க்கலாம் என்றான் அவன்.

 அந்த நேரத்தில் ஆசிர்வாதம் தாத்தா கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. பூங்குழலி நீ போற ஸ்கூல் பெரிய இடத்து பிள்ளைங்க படிக்கிற பள்ளி மா. உன்கிட்ட தேடிவந்து யாரும் வம்பு பண்ணினாலும் நீ கொஞ்சம் அமைதியா போடா செல்லம் என்று அவர் நேற்று சாயந்திரம் கூறியது நினைவுக்கு வந்தது.

 அதனால் இவனிடம் பதிலுக்கு பதில் பேசாமல் கிரவுண்டுக்கு போய் விடலாம் என்று எண்ணி அங்கிருந்து நகர முயற்சி செய்தாள்.

 என்னமோ காட்ட போறேன்னு சொல்லிட்டு பயந்து போய் போறா பாரு என்று அவன் மீண்டும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.