(Reading time: 17 - 34 minutes)
Nesam nalgum nayanilan nencham
Nesam nalgum nayanilan nencham

இந்த திடீர் உந்துதலால் மந்திரவாதியின் அடிமை ஒருவன்மீது அவன் விழ… அந்த அடிமையும் ஒரு வீரன் போலதன்னுடைய கையிலிருந்த வாளை உயர்த்தஇப்போது சண்டையை துவக்குவதில் இளமாறனுக்கு தயக்கம் எதுவும் இல்லை

கத்திகள் மோதிக் கொள்ளும் ஓசையும் அங்கிருந்த பொருட்கள் உடைபடும் கலவரமும் மின்னல் ஒளியில் காட்சிகளாகின… மொத்தம் ஆறு அடியாட்கள்…  இரண்டே நிமிடங்களில் அவர்களை இளமாறன் ஓய்த்து விட்டான். அவன் கை ஓங்குவதை பார்த்த மந்திரவாதி தன்னுடைய சக்தியை பிரயோகித்து அவனை தடுக்கஇளமாறன் அசைய முடியாமல் சுருண்டு விழுந்தான்.

கணவன் தரையில் விழுந்ததை  பார்க்கவும் பதறிய கார்குழலி கையில் வாளெடுத்து மந்திவாதியின் முன் பாய்ந்தாள். அவளுடைய பிரவேசத்தை சற்றும் எதிர்பாராத மதுரமாயன் திகைத்தான்.

"மூடப் பெண்ணே உன் உயிரை காப்பாற்ற ஓடிப் போய் விடு" என்று கர்ஜித்தான்.

"முட்டாள்உன் எண்ணம் ஈடேறாது. என் அன்னையை கொண்டு செல்ல இயலாதுஉன்னை அழிப்பேன் என்று வாக்கு தந்திருக்கிறேன்."

எதிரிலிருப்பவளின் வாளை உயர்த்திய கை சற்றும் தளராததை பார்த்து அவளிடமும் மந்திரத்தை பிரயோகிக்க தயாரானான்.

அவன் மந்திர உச்சரிப்பை தடுக்க வேண்டும் எனில் அவனுடைய முன் பற்கள் உடைபட வேண்டும். இடது கையில் வாளேந்தியவள் வலது கையில் தீமூட்ட பயன்படும் சிக்கிமுக்கி கல்லை எடுத்தாள்.

"என்னை அழிப்பாயா…" என்று குரல் உயர்த்தும் முன் கூரிய கல் அவனுடைய பற்களை பதம் பார்த்ததுபற்கள் உடைபட்ட வலியுடன் அவளை நோக்கியவனின்  பார்வையில் அவளுடைய மேடிட்ட வயிறு மின்னல் ஒளியில் தெரிந்தது.

'காலசம்காரி…' என்ற வார்த்தைகள் அவனிடம்  இருந்து தெறித்தன.

அதுதான் விதி!. அவனுடைய  மரணம் ஒரு கர்ப்பிணி பெண்ணினால்தான் நிகழும் என்பது தீர்க்க தரிசனம். அதனாலேயே அவன் பிள்ளை சுமந்த பெண்களின் கண்ணில் படாமல் விலகி

14 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.