(Reading time: 17 - 34 minutes)
Nesam nalgum nayanilan nencham
Nesam nalgum nayanilan nencham

கடற்கரையை ஒட்டிய பகுதியில் நடந்தனர்இரவு வேளை நெருங்கவும்  களைப்பு மேலிட ஓய்வெடுக்க அங்கிருந்த ஒரு பாழடைந்த கட்டிடத்தில் தஞசம் புகுந்தனர்.

"இது என்ன இடம்?. " குழலி கேட்டாள்.

"காட்டு வழியில் இருக்கும் பாழடைந்த கல் கட்டிடம்காவல் காப்போரின் இருப்பிடமான அதளையாக இருக்கலாம்சிறு தெய்வத்தின் கோவிலாகவும் இருக்கலாம்."

"பாழடைந்து இருந்தாலும் மழைக்கு பாதுகாப்பாக இருக்கிறது…"

"நாம் உள்ளே செல்ல வேண்டாம்இந்த தாழ்வாரத்திலேயே தங்கிக் கொள்வோம்."

அவன் சுமந்திருந்த பொதியிலிருந்து எரிவரட்டியை எடுத்து தீ மூட்டினான். கார்குழலியை உணவருந்த வைத்தான். அவளை மார்பில் சாய்த்துக் கொண்டு..

"குழலிஉன்னை மிகவும் சிரமப்படுத்தி விட்டேன். என்னை மன்னித்து விடு"

தரையில் கால் நீட்டி ஆசுவாசமாக சாய்ந்திருந்த கார்குழலியிடம் வருத்தத்துடன் சொன்னான்.

"பரவாயில்லைஇது தாங்கள் விரும்பி செய்வது இல்லையேதங்களுடைய வாழ்க்கையை என்னுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள். இப்போது கடினமான காலகட்டம்இதையும் ஏற்று கடந்து செல்வோம்."

"வாழ்க்கை இப்படி தலைகீழாக மாறும் என்று நான் நினைக்கவில்லை. அரசருக்கும் தேசத்திற்கும் ஒருபோதும் நான் துரோகம் செய்ததில்லை. அதிலும் நாட்டை காக்கும் பணி நான் மிகவும் விரும்பி ஏற்றுக் கொண்டது. என் மீது வீண் பழி சுமத்தி விட்டனர். அதை அரசரும் ஏற்றுக் கொண்டதுதான் மனதிற்கு வேதனையாக இருக்கிறது."

"அதையே நினைக்க வேண்டாம். இனி ஆக வேண்டியதை யோசிப்போம். இன்னும் இரண்டு நாட்கள் நடந்தால் என் தாய் வீட்டை அடைந்து விடலாம். அங்கு சென்றபின் எதிர்காலம் பற்றி திட்டமிடுவோம்"

"நினைத்தாலே அச்சமாக இருக்கிறது குழலி. எனக்கு வாள் பிடிக்கவும்.. குதிரை ஏறவும்ஈட்டி எறியவும்தான் தெரியும். ஆனால் பொருளீட்ட

14 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.