(Reading time: 17 - 34 minutes)
Nesam nalgum nayanilan nencham
Nesam nalgum nayanilan nencham

இருப்பதும் அடிக்கடி நடந்து கொண்டு இருந்தது.

இப்போதுகூட எல்லையோர தாக்குதலை முறியடிக்கதான் அவன் சென்றுள்ளான்.  அவளுடைய தோழி அது பற்றி வினவினாள்.

"அடஇன்றும் நீ தனித்துதான் இருக்கிறாயா..  மீண்டும் போர் தொடங்கி விட்டதாபகை வெல்ல என் தனயன் இருப்பதால் அரசர்கூட அந்தபுரத்தில் ஆனந்தமாக நித்திரை கொள்கிறார். என் தோழி நீதான் உறக்கம் கெடுத்து நிற்கிறாய்"

"என்ன செய்வது நங்கைநம் ராட்டிரத்தில் வடக்கிலிருந்து வருபவர்களின் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டுதானே இருக்கின்றன. பகை முடிப்பது என்பது எம் தலைவனுக்கு அவலும் வெல்லமும் கலந்து உண்பதுபோலஇந்த போரிலும் வென்று விரைவில் வீடு திரும்புவான் எம் தலைவன் " என்று நம்பிக்கையுடன் உரைத்தாள்.

"வயிற்றில் பிள்ளை சுமந்து நிற்கிறாய்இந்த நிலையிலாவது உன்னை கவனிக்க வேண்டாமா…   அரசரிடம் சொல்லி சில காலம் விடுமுறை கேட்கலாமேஅல்லது உன்னை தாய் வீட்டிற்காவது அனுப்பலாமே.."

"அவர் இங்கிருக்கும்போது அன்னைக்கு அன்னையாக தந்தைக்கு தந்தையாக என்னை கவனித்துக் கொள்கிறார் அது போதும். நான் நலமாக இருக்கிறேன்…" என்று அவள் சொல்லும்போது

"வணக்கம் அக்கா" என்று சொல்லிக் கொண்டு ஏழெட்டு சிறுமிகள் அங்கு வந்தனர்.

"அடவந்து விட்டீர்களாஇன்று மழை நாளாக இருப்பதால் வர மாட்டீர்கள் என்று நினைத்தேன். சரிநேற்று நான் கற்று தந்த பாடத்தைபயிற்சி செய்யுங்கள்" என்றாள்.

அதை சிறுமிகள் செய்யும்போது…

"அப்படி இல்லை. வாளின் பிடியை தவறாக பிடிக்கிறாய்மேலும் பாதத்தில் உடல் பாரத்தை முழுமையாக இறக்கி  அழுத்தமாக ஊன்றுகிறாய். இதனால் உன்னால் விரைவாக சுழல முடியாது. அழுத்தத்தை உன் கைக்கு கொண்டு வர வேண்டும்… "

விளக்கியவள் ஒரு பாதத்தை ஊன்றி மறுகாலை சுழற்றி சற்று நிமிர்நது

14 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.