(Reading time: 15 - 30 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

அந்த நம்பிக்கையிலேயே மனதில் உள்ள கற்பனை உருவத்தோடு உன் வாழ்க்கையை இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துக் காத்திருந்தாயே... அந்த காத்திருப்பு என்னவானது....

கற்பனையில் ஒருவனோடு மனதை பறிகொடுத்து விட்டு சம்மந்தமில்லாத மற்றொருவரை திருமணம் செய்துக்கொள்ள முன்வந்திருக்கிறாயே... உன்னால் மனம் ஒத்து அந்த குடும்பத்தில் வாழ முடியும் என்று நினைக்கிறாயா... மனதில் எதுவும் இல்லாமல் வெற்று மனதோடு இந்த திருமணத்திற்கு சம்மதம் கூறியிருந்தால் இருந்தால் கூட உன் மனதிற்குள் அவர் வருவார் என்று ஒரு நம்பிக்கையோடு என்னால் வாழ்த்த முடியும். ஆனால் உன் மனது முழுவதும் வேறு ஒருவன் நிரம்பி இருக்கும் போது இந்த திருமணம் எப்படி அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறாய்.

அந்த குழந்தைக்காக தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று சொன்னால் அந்த குழந்தையை கவனித்துக் கொள்ளும் ஒருத்தியாக இருந்து அந்த குழந்தை மீது பாசத்தைக் காட்டி இருக்க வேண்டியதுதானே... அதை விட்டு விட்டு இப்படி ஒரு வீணாக பொய்யான மாய்மாலமாக கல்யாணம் என்று பெயரிட்டு ஒரு நாடகத்தை நடத்த வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்க சந்தியா பேசிய எந்த வார்த்தைகளும் ஜனனியின் மனதை அடையவில்லை.

எப்பொழுது சந்தியா ஜனனியின் கற்பனை காதலனை பற்றி பேச தொடங்கியிருந்தாலோ அப்பொழுதே ஜனனியின் நினைவும் அவனையே நினைத்து பார்க்க தொடங்கியிருந்தது. சந்தியா பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் ஜனனியின் ஒரு காதின் வழியே சென்று மற்றொரு காதின் வழியாக வெளியே வந்துஅந்த அறையை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தது..

ஆனால் ஜனனியின் மனம்அவள் மனதில் வரைந்து வைத்த அந்த கற்பனை காதலனை நேரில் பார்த்ததை நினைத்து பார்த்தது.

அவள் நினைத்தது போலவே இருந்த அவனை சென்னை வந்த முதல் நாளிலேயே கண்டுகொண்டாள். ஆனால் துரதிஷ்டம் என்னவென்றால் அவன் இன்னொரு பெண்ணை காதலிக்கிறான் என்பது தான் அவள் இதுவரை பல தடவை அவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் பார்த்து இருக்கிறாள். அவர்கள் இடையே நல்ல புரிதல் இல்லையோ என்று நினைக்குமளவு அவள் பார்க்கும் போதெல்லாம் விவாதம் செய்து கொண்டுதான் இருந்தார்கள். உண்மையிலேயே அவர்கள் இருவரும் எதிரும் புதிருமாக இருக்கிறார்களா? அல்லது தனக்கு தான் அப்படி தெரிகிறதா? என்று பலமுறை யோசித்து பார்த்து விட்டாள். எது எப்படியோ... எனக்கு என்று நான் செதுக்கிய சிற்பம் இனி என்னுடையது அல்ல என்ற முடிவுக்கு வந்தவள்

12 comments

• Sandhu indha dhana ena ippadi oru look kudukuraru 😈 idhu thevaiya unakku :o ivara pathi ethavdhu theriyuma illai janu oda karpanai oviyam jananu than andha look ah :Q: :Q: veena.pona.sweena semma jeba ma'am 😁😁😁 idhula pudhusa kuti thangachi swapna vera 👌 semma interesting screen play ji. 👏👏👏👏👏👏 Professor sweena ellarum plan pottu than execute panuranga pole....but news paper article yen win kk shocking aga irukku :Q: suspense thangala ji...sikrama.adutha epi post panunga pa.

Thank you and good night.
• Lovely update malar
Ha ah sandiya ku jana taruni trinjiduchi
Aswit ku ipa tana anda paper kidaikatum
Kalayanam nirutha vandavaluku kalayanam nadakuma ndra kavalai ha ha
• Dear Jeba! Good evening! It looks you have a technique to build stories with twists and turns! Born writer! ரொம்ப நல்லாயிருக்கு! வாழ்க வளமுடன்!
• Interesting epi mam. sandhiya ku Jana va therinja madhiri react pandranga but Jana and sweena opposite ah react pandranga 🤔 waiting for your next epi mam
• :Q: jananiyin bathil ennavaaga irukkum & enna kaaranamaaga irukkum.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.