(Reading time: 14 - 27 minutes)
Ondru serntha anbu maarumo
Ondru serntha anbu maarumo

பேபி..... உன் வீடு எங்க இருக்குன்னு நீ சொல்லுவியாம் .... உன்னை அங்க இறக்கி விட்டுட்டு அப்படியே உங்க மாம் கிட்ட  என் மாம்யோட ஹெல்த்யா செக் பண்ணிட்டு அங்கிள் கெளம்பிடுவேனாம் ஓகேவா என்றான் அன்புடன்....

ஆதியின் அன்பான பேச்சு அந்த குட்டிக்கும் பிடித்து இருந்தது. Ok அங்கிள் Done என்றாள்.

அந்த குட்டியை பார்த்து சிரித்த ஆதி.... நீ பார்க்க குட்டிய இருக்க.... அப்புறம் ஏன் நடுவுல நடுவுல இங்கிலிஷ்லா பேசுற???? உனக்கு தமிழ் பிடிக்காத இல்லை பேச வராதா.... ஆனா நீ இங்கிலீஷியா விட தமிழ்தான் நல்ல பேசுற தெரியுமா???? உன் குரலள ரொம்ப அழகா தப்பு இல்லாம நிறுத்தி நிதானமா அழகா பேசுற  என்றான்.

எஸ் அங்கிள் எனக்கும் தமிழ் தான் பிடிக்கும். ஆனா, அம்மா என்னை வெளிநாட்டுக்கு அனுப்ப போறாங்களாம். அங்க தான் நான் இனிமேயே படிப்பேனாம்.... அதனால் நான் ஸ்கூல் போறதுக்கு முன்னாடியே எனக்கு இங்கிலிஷ் டியுஷன் வச்சுட்டாங்க....அப்புறம் ஸ்கூல்லயும் இங்கிலிஷ் சொல்லி தருவாங்க. வீட்டில அம்மாகூட இருக்கும் போது இங்கிலிஷ் லா பேச சொல்லுவாங்க... தமிழ் கூட அம்மாக்கு தெளிவா பேசணும் இல்லைன்னா கோபம் வந்துடும் அம்மாக்கு என்றவள்.... குனிந்து ஆதியின் காது அருகில் சென்றவள் மாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்றாள் ரகசியம் பேசும் குரலில்.

அதை கேட்டு வெகு நாட்களுக்கு பிறகு ஆதி வாய் விட்டு சிரித்தான்.. அப்ப உங்க'அம்மாவை நான் கடத்திட்டு போயிடுறேன் நீ ஹாப்பியா இரு என்றான்.

.

நோ நோ  அங்கிள்.... நான் வெளிநாடு போய் படிச்சுட்டு பெரிய பொண்ணயா வந்தாதான் என்னோட அப்பாக்கு என்னை ரொம்ப பிடிக்குன்னு அம்மா சொல்லி இருக்காங்க....அப்பதான் என்னை பார்க்க வருவார்களாம் அம்மா சொன்னாங்க.

அப்ப, நான் குட் கேர்ள் யா அம்மா சொல்றதை கேட்கணும் இல்ல என்றாள் தலையை அசைத்தவாறு.

இப்பொழுது பருவதம் அம்மாளும் ஆதியும் ஒருவரை ஒருவர் யோசனையுடன் பார்த்து கொண்டனர்.  கண்டிப்பாக, இந்த குழந்தையின் அம்மா ஏதோ ஒரு கஷ்டத்தில் இருக்கிறார் என்று புரிந்தது.

கண்டிப்பா.... நீ உன் அம்மா பேச்சை தான் கேட்கணும் . குட் கேர்ள் என்றான் ஆதி.

உன்னோட பெயர் என்னடா???? என்று பாசத்துடன் கேட்டார் பருவதம் அம்மாள்.

என் பெயர் அபிநயா.... அம்மா என்னை அபி ன்னு  கூப்பிடுவாங்க.... நீங்களும் அப்படியே கூப்பிடுங்க பாட்டி என்று கொஞ்சும் குரலில் கூறினாள்.

10 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.