(Reading time: 13 - 25 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

துவங்கியது.

       அப்போது....

 

       “சர்...சர்ரென்று அந்தச் சூழ்நிலையின் ரம்மியத்தைக் குலைக்கும் விதமாய் கடந்து சென்றன இரண்டு போலீஸ் ஜீப்புகள். 

       அந்த ஜீப்களின் வேகமே ஏதோ ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கின்றது என்பதை உணர்த்தும் விதமாய் இருந்தது.

       சற்றுத் தள்ளியிருந்த அந்த  விஸ்வா டவர்ஸ்காம்ப்ளக்ஸின் கீழே  க்ரீச்என்ற ஓசையுடன் அந்த ஜீப்களிரண்டும் நிற்க  பருத்தோர் கூட்டமும்  இளையோர் கூட்டமும் தங்கள் வேலையை நிறுத்தி விட்டு  நெற்றியை சுருக்கிக் கொண்டு திரும்பிப் பார்த்தன.

       “என்ன சார்...காலங்காத்தால போலீஸ் ஜீப்புக வந்து நிக்கிதுக?.. ஏதாச்சும் பிரச்சினையா?”  இரு கைகளையும் வேகமாய் ஆட்டியபடி நடந்து கொண்டிருந்த சமீபத்தில்தான் ரிட்டையர்டு ஆகியிருந்த கலால் துறை அதிகாரி கோகுல் தாஸ்  தன் சக வாக்கிங் நண்பரான ரிட்டையர்டு கல்லூரி பிரின்ஸிபால் வர்கீஸிடம் கேட்டார்.

       “யாருக்குத் தெரியும் ஸ்வாமி?... நானும் உங்க கூடத்தானே வந்திட்டிருக்கேன்?...வேணா வாங்க என்ன?ன்னு போய்ப் பார்த்திட்டே வந்திடுவோம்”   கோகுல்தாஸ் சொல்ல

       தங்கள் வாக்கிங் திசையை மாற்றிக் கொண்டு இருவரும்  விஸ்வா டவர்ஸ்”  இருக்கும் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

       அவர்கள் அங்கு போய்ச் சேரும் முன்னரே ஏகப்பட்ட கூட்டம் கூடி விட்டது.  கூட்டத்தில் கிட்டத்தட்ட எல்லோர் முகத்திலுமே ஏதோ இனம் புரியாத ஒரு பீதி அப்பியிருந்தது.

       ஒரு போலீஸ்காரர் கூட்டத்தை விரட்டிக் கொண்டிருந்தார்,  “போங்கப்பா..போங்கப்பா!...கூட்டம் போடாதீங்கப்பா..

       வெறும் காற்றில் லத்தியைச் சுழற்றி வீரம் காட்டிக் கொண்டிருந்த அந்த போலீஸ்காரரின் விரட்டலுக்குப் பணிந்து கூட்டம் லேசாய்க் கலைய   கோகுல் தாஸும்   வர்கீஸும் கூட்டத்தின் முன் பகுதிக்குச் சென்று எட்டிப் பார்த்தனர்.

       அங்கே....

       சிமெண்டுத் தரையில்...கைகளையும்  கால்களையும் தாறுமாறாக விரித்துக் கொண்டு குப்புறக் கிடந்தான் ஒரு மனிதன்.  

       அவன் தலைப் பகுதியில் உற்பத்தியாகியிருந்த ரத்த நதி மெல்ல ஊர்ந்து சில அடிகள்

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.