(Reading time: 13 - 25 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

முள் பாதையின் குறுக்கே புகுந்து தண்டவாளத்தின் மீது ஏறி அவள் பின்னால் ஓடினார்

       கத்திக் கொண்டே ஓடி வரும் அவரை நின்று திரும்பிப் பார்த்த அப்பெண் தன் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினாள்ஆனால் பயிற்சி பெற்ற ஓட்டக்காரரான இன்ஸ்பெக்டர் அவளை எளிதில் எட்டிப் பிடித்து தண்டவாளத்திற்கு வெளியே இழுத்தபடி விழுந்தார்.

       அவள் சுதாரித்து எழுவதற்குள் ரயில் அவர்களைக் கடந்து மறைந்தது.

       “இந்தாம்மாதற்கொலை முயற்சிக்கு என்ன தண்டனை தெரியுமா?” விறைப்பாய்க் கேட்டார்.

       “புடிச்சிட்டுப் போங்கஏற்கனவே ஒரு தடவை உங்க ஸ்டேஷனுக்குள் நுழைஞ்ச பாவத்துக்குத்தான் தண்டவாளத்துல ஓடிக்கிட்டிருக்கேன்என்றாள் அவள் விழிகளைப்  பெரிதாக்கி,

       “என்ன..என்ன சொன்னேநீ தற்கொலை பண்ணிக்கப் போனதுக்குக் காரணம்நாங்களா?..அதாவது போலீஸ்காரங்களா?”

       “ஆமாம்ஆமாம்ஆமாம்என்று சொல்லி விட்டு மேற்கொண்டு பேச  இஷ்டமில்லாதவளாய்  நடந்தவளை தடுத்து நிறுத்திய இன்ஸ்பெக்டர், 

       “த பாரும்மா..நான் கொஞ்சம் கண்டிப்பானவன்இந்த மாதிரி அரையும் குறையுமா போற போக்குல புதிர் போட்டுட்டுப் போற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்நீ தவறில்லாதவள்ன்னா ஒழுங்கா..மரியாதையா என்ன நடந்ததுன்னு என்கிட்ட விவரமாச் சொல்லுஎன்னால முடிஞ்ச வரைல உனக்கு நல்லதையே செய்யறேன்..ம்..சொல்லு

       அவரது பேச்சில் லேசாக நம்பிக்கை வர, 'என் பேரு மகேஸ்வரி…” அவள் சொல்ல ஆரம்பித்தாள்.

                                        (())

       போலீஸ் ஸ்டேஷன்.

       “சார்மணி இப்பவே ஏழாயிடுச்சுஎங்க வீட்டுல எங்களைத் தேடுவாங்க..நாங்க போறோம்மகேஸ்வரியும் விசாலாட்சியும் அந்தப் போலீஸ்காரரிடம் கேட்க,

       “த பாருங்கம்மா..உங்களைப் போகச் சொல்லுற அதிகாரம் எனக்கில்லைஇன்ஸ்பெக்டர் வந்துடறேன்னு போன் பண்ணியிருக்கார்வந்ததும் உடனே விசாரணையை முடிச்சுட்டு உங்களை அனுப்பிடறோம்அதான் உங்களுக்குத் துணையா ஒரு பெண் போலீஸைக் கூட வெச்சிருக்கோமே அப்புறமென்ன?”

       வாசலில் வந்து நின்ற சைக்கிளிலிருந்து இறங்கி வந்த தன் அண்ணனைப் பார்த்ததும்

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.