இருக்க முடியும். ஆமா நீங்க மட்டும்தான் வந்தீங்களா இல்லை தீப்தியும் வந்திருக்காளா”
“ஏன்டா இப்ப அவளை பத்தி பேசற”
“இல்லை மாமா இங்க ரொம்ப குளிரா இருக்கு”
“அதுக்கு”
”துணைக்குத்தான் மாமா”
“அவள் பாலாகிட்ட பத்திரமா இருக்கா”
”அய்யோ மாமா தப்பு பண்ணிட்டீங்க மாமா, நானாவது அன்னதானம் கோயில் அது இதுன்னு ஒழுங்கா இருப்பேன் ஆனா பாலா மோசமானவன் மாமா போச்சி அவன் தீப்தியை ஏதாவது செய்யாம இருக்கமாட்டானே”
“என்னடா சொல்ற” என பயந்தார் கேசவன்
“ஆமாம் மாமா நான் உண்மையைத்தான் சொல்றேன்”
“டேய் பொய் சொல்லாதடா என்னை இங்கிருந்து நீ அனுப்ப திட்டம் தீட்டறியா”
“யாரு நானா சரி உங்க இஷ்டம் 3 மாசம் கழிச்சி தெரியப்போகுது பாருங்க” என சொல்லிவிட்டு எழுந்து அவந்திகாவிடம் வந்தான். அவளது கன்னத்தைக் கிள்ளினான்
”டேய் அங்க என்னடா செய்ற” என கேசவன் கத்தவும்
”ஆ மாமா நிஜமான அப்பாவே அமைதியா நின்னு வேடிக்கை பார்க்கறாரு நீங்க ஏன் குதிக்கறீங்க” என அவன் சொல்லவும் வேகமாக ஹரியிடம் வந்து அவந்திகாவிடமிருந்து அவனை தள்ளி நிறுத்தி தன்னுடன் பிடித்துக்கொண்டார்
“போதும்டா அவர் தங்கமான மனுசன், விவரம் தெரியலை முதல்ல உன்னைப்பத்தி தெரியலை, நீ என்னென்ன வேலைகள் செய்வேன்னு தெரிஞ்சிருந்தா இந்த வீட்லயா உனக்கு இடம் கொடுப்பாரு”
“இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க”
“என்னவா முதல்ல அவந்திகாவை காப்பாத்தனும்”
“சரி அடுத்து”
“அவளை சென்னைக்கு கூட்டிட்டு போகனும்”
”ஏன் அவள் வீடு இதுதானே”
”இனிமே அவள் இந்த ஊர்ல வேலை செய்ய வேணாம் எனக்குன்னு ஆஸ்பிட்டல் இருக்கு, அங்க வந்து செய்யட்டும் அவளோட லட்சியம் என்ன சேவைதானே, அதை அங்கயே செய்யட்டும் இலவச மருத்துவம் கூட செய்யட்டும், இங்க இருந்தா எவனாவது அவளை தொந்தரவு செய்வான்” என ஹரியை பார்த்தவாறே கூற அதைக் கண்டு சிரித்தார் முரளி அவர்