மரியாதையில்லாம நடத்துவீங்களா, அவருக்கு குளிருதுல்ல போங்க போய் சால்வை கொண்டு வாங்க” என சொல்லவும் ஹரிக்கு அந்த குளிரிலும் வேர்த்துக் கொட்டியது
”மாப்பிள்ளையா நானா” என அவன் வாய்விட்டே கேட்டான். அவந்திகாவை விட்டு அவனிடம் தாவினார் முரளிதரன்
”ஆமாம் நீங்கதானே என மாப்பிள்ளை” என அவனை கட்டிக் கொண்டார்.
அவனும் கேசவனிடம் இருந்து தப்பித்ததை நினைத்து பெருமாளுக்கு பல நன்றிகள் சொன்னவன் முரளிதரனிடம் ஒட்டிக்கொண்டான். வேலையாட்களும் அவனிடம் வந்து
”சின்ன முதலாளி இந்தாங்க வாங்கிக்குங்க” என பாந்தமாக சால்வையை நீட்டவும் அதை வாங்கி தன் மீது போர்த்திக் கொண்டான் ஹரி.
முரளிதரன் அவந்திகாவிடம்
”நீங்க ரெண்டு பேரும் ஏன் இங்க வந்தீங்க அந்த சிவசங்கரனுக்கு தெரிஞ்சா என்னாகும்னு யோசிச்சிங்களா”
என கேட்க ஹரியே பதில் சொன்னான்
”மாமா எத்தனை நாள்தான் ஓடி ஒளியறது சொல்லுங்க எத்தனை நாள்தான் லஷ்மி இப்படி சாரி அவந்திகா இப்படி பயப்படுவா, அதான் நான் ஒரு முடிவு பண்ணிட்டேன் இந்த பிரச்சனையை சரி பண்றதுன்னு”
”எப்படிப்பா தப்பு அவந்திகா மேல இருக்கு, அதை சிவசங்கரன் வெளியே காட்டினா என் பொண்ணோட எதிர்காலமே போயிடுமே மாப்பிள்ளை, இந்த விஷப்பரிட்சை தேவையா”
”இல்லை மாமா நீங்க தப்பா நினைச்சிட்டு இருக்கீங்க, சிவசங்கரன் தப்பானவன் மோசமானவன் எனக்கென்னவோ அவந்திகா அவரோட பேச்சை கேட்கனும்னே அந்தாளு ட்ராமா பண்ணியிருக்கான் அவ்ளோதான், அதை கண்டுபிடிச்சி சொல்லிட்டா போதும் அவந்திகா இதுலயிருந்து தப்பிச்சிடுவா, நீங்க கவலைப்படாதீங்க நான் வந்துட்டேன்ல நான் பார்த்துக்கறேன்
அப்புறம் மாமா, ரொம்ப தூரத்தில இருந்து வந்திருக்கோம் சாப்பாடு கிடைச்சா சாப்பிட்டு நிம்மதியா தூங்குவோம், என்ன சொல்றீங்க மாமா” என அவன் சிரித்துக் கொண்டே கேட்க முரளிதரனின் முகத்தில் இருந்த கவலை மறைந்து சிரிப்புடன் வேலைக்காரர்களிடம்
”சாப்பாடு ரெடி பண்ணுங்க சீக்கிரம்”
“அப்புறம் ஒரு விசயம் மறந்துடாதீங்க அவந்திகா இங்க வந்த விசயத்தை யாருமே யாருக்குமே சொல்லக்கூடாது புரியுதா” என ஹரி வேலைகாரர்களிடம் சொல்லவும் அவர்களும் தலையை தலையை ஆட்டினார்கள்.