”டாக்டர் அப்பன் சொன்னதை கூட என்னால செய்ய முடியும்னு வெச்சிக்க ஆனா உன் ஊட்டி அப்பன் டக்குன்னு எனக்கு சொந்தமா எஸ்டேட் இருந்தாதான் பொண்ணை தருவேன்னு சொல்லிட்டா இந்த ஜென்மத்தில நான் சன்னியாசி வாழ்க்கைதான் வாழனும்”
”இல்லை எங்கப்பா அப்படியெல்லாம் கேட்கமாட்டாருன்னுதான் நான் நினைக்கிறேன்“
”நீ நினைக்கமாட்ட ஊட்டி அப்பாவும் நினைக்கமாட்டாரு ஆனா அந்த கேசவன் மாமா இருக்காரே அவர் நினைப்பாரு. சும்மாயில்லாம ஊட்டி அப்பாகிட்ட பேசி என் வாழ்க்கையை கெடுக்காம இருந்தா சரி”
“இல்லைங்க இந்த முறை நான் ஸ்ட்ராங்கா இருக்கேன்”
“சரி பார்க்கலாம் நீ எந்த அளவுக்கு எனக்கு துணையா இருக்கேன்னு”
“நாம பாட்டுக்கு வந்துட்டோமே காஞ்சிபுரத்தில என்ன நடந்திருக்கும்”
“தெரியலையே இரு போன்ல பேசுவோம் யாருக்கு போன் பண்ணலாம்”
“அப்பாக்கு பண்ணுங்க”
”முடியாது அவரோட பேசினா என் போன்ல இருக்கற பேலன்ஸ் தீர்த்துடும் வீட்டுக்கு பண்றேன்”
“போலீஸ் இருந்தா”
“அது வேறயா அப்ப யாருக்கு பண்ணலாம்”
“அக்காக்கு பண்ணுங்க”
“ஏம்மா நான் நல்லாயிருக்கறதே உனக்கு பிடிக்கலையா”
“சாரி”
“ம் சின்னாக்கு பண்ணலாம்” என நினைத்தவன் உடனே சின்னாவை தொடர்பு கொண்டான்.
”ஹலோ அண்ணா”
“சின்னா அங்க என்ன நடந்திச்சிடா”
“என்னென்னவோ நடந்து போச்சி ஆமா அந்த அக்காவை ஏன் நீ கூட்டிட்டு போன”
”அதை விடு விசயத்துக்கு வா வீட்ல என்ன நடக்குது அதை சொல்லு”
“தாத்தாவையும் கேசவனையும் போலீஸ் பிடிச்சி லாக்கப்ல வைச்சிடுச்சி”
“அப்படியா ஏன்டா”
“அந்த அக்காவை நீ கிட்நாப் பண்ணியாமே அதான்”
“நான் கிட்நாப் பண்ணேனா யார்டா சொன்னது”
“போலீஸ்கூட ஒரு ஆள் இருந்தான் அந்தாளு சொன்னான்”
”ஓ சிவசங்கரனா சரி வேற”