”அப்பா இதை பார்த்தார்னா தப்பா நினைப்பாரு”
”அதுக்கு வாய்ப்பேயில்லை மாமா ரொம்ப நல்லவரு”
”நான் சொன்னது என் ஊட்டி அப்பாவை இல்லை”
“ம் வேற யாரு”
“ம் கேசவன் அப்பாவை”
“அவர்தான் இங்க இல்லையே நீ வாடி தங்கம்” என அவளை இழுக்க
”டேய் விடுடா அவளை” என கத்தினார் கேசவன்.
சட்டென அந்த குரலால் பயந்து கண்விழித்தவன் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து சுற்றி சுற்றி பார்த்துவிட்டு வாசலை பார்த்தான். அங்கு நிஜமாகவே கேசவன் இருக்கவும் நொந்து போய் தலையில் கைவைத்துக் கொண்டான்.
”என்னடா செய்ற இங்க”
“நீங்க ஏன் இங்க வந்தீங்க மாமா”
”ஏன் நான் வந்தா என்ன தப்புங்கறே”
“எப்ப பாரு என் சந்தோஷத்தை கெடுக்கறதுக்காகவே வந்திருக்கீங்க ஆமா நாங்க இங்க இருக்கறது உங்களுக்கு எப்படி தெரியும்” என அவன் சொல்லும் போதே முரளிதரனும் அந்த அறைக்குள் வந்தார். கேசவனும் ஹரியும் பேசுவதை இல்லை சண்டை போடுவதை அவந்திகாவுடன் சேர்ந்து ரசித்துக் கொண்டிருந்தார்.
”ஆமா நீ அவளை கூட்டிட்டு எங்க போயிட போற நேரா இங்கதான் வருவேன்னு தெரியும் சின்னா கூட சொன்னான், நீ ஏதோ ஹனிமூன் போறேன்னு சொன்னியாமே அதான் நானும் வந்துட்டேன்”
”நான் அவன்ட்ட யாருகிட்டேயும் சொல்லக்கூடாதுன்னுதானே சொன்னேன்”
“டேய் நான் பொண்ணோட அப்பாடா நான் மிரட்டவும் அவன் சொல்லிட்டான். அதை விடு பிரச்சனையை சரி பண்ணுன்னு உன்கிட்ட என் பொண்ணை நம்பி அனுப்பினா இப்படியாடா செய்வ, இல்லை நானும் உன்கூட இங்கதான் இருக்கப்போறேன்”
“ஏன் என் நிம்மதியை கெடுக்கவா”
“யாரோட நிம்மதியை யார் கெடுத்தா, இங்க வந்தும் அவள்ட்ட நீ நெருங்கவே கூடாது, முதல்ல வா, அவந்திகா எவ்ளோ பெரிய பிரச்சனையில இருக்கா இங்க நீ நிம்மதியா தூங்கறியா” என கேட்டுக் கொண்டே மெத்தையில் அமர்ந்து அவனது முதுகில் ஒரு அடி கொடுத்தார்
”ஆ மாமா ஏன் அடிக்கிறீங்க, கிடைச்ச நேரத்தில தூங்கினாதானே மத்த நேரத்தில விழிப்பா