ஹரிக்கு அது சுகமாக இருந்தது. அவன் அதிகமாகவே அவந்திகாவை அணைத்தப்படி சென்றான். மற்றவர்களுக்கு கேட்காதவாறு அவளின் காதில் மட்டும் குசுகுசுவென எதையோ பேசிக்கொண்டும் அவளை சிரிப்பூட்டிக் கொண்டும் வந்து சேர்ந்தான்.
அதற்குள் இருட்டவும் குளிர் எடுக்க ஆரம்பித்தது. அவந்திகா அவனை அணைத்தப்படி இருந்தாள். அது அவனுக்கு அந்த குளிருக்கு இதமாக இருக்கவே அவன் அவளை அழைத்துக் கொண்டு அவளுடைய வீட்டை அடைந்தான். கூர்க்கா அவந்திகாவை பார்த்த உடனே கேட் திறந்துவிட்டான். உள்ளே நுழைந்த அவந்திகா வீட்டுக்குள் இருந்த வேலைக்காரர்களிடம்
”அப்பா எங்க” என கேட்க அவர்கள்
”அப்பா தூங்கறாங்கம்மா”
”வாங்கம்மா எத்தனை நாளாச்சி உங்களை பார்த்து”
”நான் இப்பவே போய் ஐயாவை கூட்டிட்டு வரேன்” என ஆளுக்கு ஒருவராக பதில் சொல்லிவிட்டு ஓடினார்கள்.
அங்கிருந்த சோபாவில் அமர்ந்த ஹரியும் அவந்திகாவும் முரளிதரனுக்காக காத்திருந்தார்கள்.
2 நிமிடம் கழித்து அவரோ அரக்க பரக்க ஓடிவந்தார்
”அவந்திகா” என அழைத்துக் கொண்டே வந்தவர் அவளை கண்டதும் அவளை பாசமாக அணைத்துக் கொண்டார்.
அவர் வரவும் பவ்யமாக எழுந்து நின்ற ஹரியும் எதுவும் பேசாமல் குளிருக்கு நடுங்கியபடியே அமைதியாக இருந்தான்.
முரளிதரன் அவந்திகாவிடம்
”அம்மாடி எப்படிம்மா இருக்க, எத்தனை நாளாச்சி உன்னைப் பார்த்து” என அவர் கண்கலங்கவும்
”அப்பா எனக்கும் உங்க ஞாபகம்தான் அடிக்கடி வரும்” என சொல்லி அவளும் கண்கலங்கவும் ஹரிக்கு என்ன செய்வதென தெரியவில்லை.
”எப்படிம்மா இங்க வந்த அந்த சிவசங்கரன் சாயங்காலமா போன் பண்ணான் உன்னை கண்டுபிடிச்சதா சொன்னானே”
“ஆமாம்பா தப்பு என்னோடதுதான் உயிருக்கு போராடிக்கிட்டு இருந்த ஒருத்தரை காப்பாத்த வேண்டியது அவசியமா போச்சி, அதனால வேற வழியில்லாம சர்ஜரி செஞ்சேன் அதுலதான் நான் மாட்டிக்கிட்டேன்பா, அப்புறம் ஹரிதான் என்னை அவர்ட்ட இருந்து காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்தாரு” என சொல்லவும் முரளிதரன் ஹரியை பார்த்தார். அவன் குளிரில் நடுங்குவதைக் கண்டு வேலைக்காரர்களை அழைத்தார்
”இங்க வாங்க எல்லோரும், நம்ம வீட்டுக்கு மாப்பிள்ளை வந்திருக்காரு இப்டிதான்