“வேற என்ன காலையில பாலா அண்ணா போய் பெயில் எடுத்து கூட்டிட்டு வந்துட்டாரு”
”அப்படியா நல்ல விசயம்”
“சரி நீ எங்க இருக்க”
“நான் கோயம்புத்தூர் போய்ட்டு இருக்கேன்”
“எதுக்கு”
“ஊட்டிக்கு போகலாம்னு”
“எதுக்கு”
“ஹனிமூனுக்குடா”
“இந்த விசயம் அக்காவோட அப்பாக்கு தெரிஞ்சா என்னாகும்”
“என்ன வேணும்னாலும் ஆகட்டும், நான் திரும்பி வர்ற வரைக்கும் அன்னதான சமையல் செய்யுங்க, நான் வந்து பணம் கொடுத்துடறேன்”
“சரி அப்புறம் நீ எப்ப வருவ”
“இருடா ஹனிமூன் முடிஞ்சி வரேன் அப்புறம் நான் பேசினதை யார்கிட்டயும் சொல்லாத”
“சரி சொல்லலை வைச்சிடேறேன்” என சொல்லிவிட்டு போனை வைக்கவும் சின்னா சொன்னதை அவந்திகாவிடம் சொன்னான்
”அய்யோ என்னோட அப்பா பாவம்”
”ஆ அப்ப என் தாத்தா பாவம் இல்லையா”
”எங்கப்பா ஒரு டாக்டர் இப்படி ஆனா அவரோட கெரியர் என்ன ஆகும்”
“எங்க தாத்தா கூட ஊருக்குள்ள பெரிய மனுஷன்மா, 3 கோயிலுக்கு அன்னதானம் செய்றவரு அவர் மானம் போனா பரவாயில்லையா”
என அவன் கோபமாக பேசவும்
அவனை பார்த்து முறைத்தாள்
”ஏண்டி இது உனக்கே நியாயமா இல்லை, சொந்த அப்பாவுக்காக நீ வருத்தப்பட்டாலும் நியாயம்னு சொல்வேன், அதைவிட்டுட்டு அந்தாளுக்கு போய் இவ்ளோ வருத்தப்படற”
“என்ன இருந்தாலும் அவரும் என்னை நல்லா பார்த்துக்கிட்டாரு”
“சரி விடு ரெண்டு பக்கமும் மானம் போச்சி, யாரால உன்னால அதை மறந்துடாத”
“ஆமாம் என்னாலதான் நான் வந்தே இருக்க கூடாது தப்பு பண்ணிட்டேன்” என அவள் அழவும் அவளை சமாதானம் செய்ய ஆரம்பித்தான் ஹரி.
கோவை வந்த பின்பு இறங்கி இருவரும் அங்கிருந்து பஸ் மூலமாக ஊட்டிக்கு பயணப்பட்டார்கள். குளிர் வேறு பஸ்ஸில் நெருக்கடியத்துக்கொண்டு பயணம். குளிரிலும்