“சரி அப்பா எப்படியிருக்காரு”
“ம் பணக்கார அப்பா மாதிரியிருக்காரு, அவ்ளோ பெரிய வீட்ல நீயும் உன் அப்பாவும் எப்படித்தான் தனியா இருக்கீங்களோ”
“என்ன செய்றது அம்மா இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்”
”ஏன் உன் சொந்தக்காரங்க யாரும் இல்லையா என்ன”
“இருக்காங்க ஆனா எங்கப்பா லவ் மேரேஜ்ங்கறதால அவங்களுக்கு பிடிக்கலை எங்களை ஒதுக்கிட்டாங்க”
“சரிம்மா அம்மா இறந்த பின்னாடியாவது வந்திருக்கலாமே”
“வந்திருக்கனும் என்னவோ அப்பா அம்மாவை நினைச்சிட்டே இருந்திட்டாரு சொந்தங்கள் கிட்ட போனா அவருக்கு மறுமணம் செஞ்சிடுவாங்கன்னு பயந்தாரு, அவர் ரொம்ப டீசன்டானவரு”
“நல்லவர்தான் ஆனா கேசவன் மாமாவை பத்தி நீ என்ன நினைக்கிற”
“என்ன நினைக்கனும் அவரும் எனக்கு அப்பாதான் ஆபத்து காலத்தில எனக்கு உதவி செஞ்சாரே”
“அது ஓகேம்மா, இப்ப உன்னை பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சி. அப்புறம் உன் பிரச்சனையையும் நான் சால்வ் பண்ணிடறேன்னு வைச்சிக்கயேன், அதுக்கப்புறம் கேசவன் மாமா நமக்குள்ள வரமாட்டார்ல” என்றான் சந்தேகத்துடன்
”தெரியலை”
“தெரியலையா சுத்தம் இதப்பாரு கல்யாணம் ஆன பின்னாடி அவரை நீ கிட்ட சேர்த்த அவ்ளோதான்”
“அதுக்கு இன்னும் 1 வருஷம் இருக்கு”
”1 வருஷமா”
“ஆமாம் எங்கப்பா சொன்ன மாதிரி வீடு நகை பணம் எல்லாத்தையும் சம்பாதிங்க அப்புறம்தான் நமக்கு கல்யாணம்”
”ஆஹா சூப்பர், அவர் மறந்தாலும் நீயே ஞாபகப்படுத்து ஆனா அவந்திகா ஒரு விசயம் சொல்லு”
”என்ன”
“இல்லை டாக்டர் அப்பனே இவ்ளோ வேணும்னு லிஸ்ட் போட்டாரே ஊட்டி அப்பாவே 4 எஸ்டேட் ஓனராச்சே அவர் கூட இந்த மாதிரி கேட்பாரா”
“தெரியலை இப்ப நாம அங்கதானே போறோம் அவர்கிட்டயே கேட்டு தெரிஞ்சிக்குங்க”