தனிச்சை செயலாக ‘ரோஹித் அப்பா’ நின்ற திசையில் நடந்தாள் சஹானா. அவன் நின்றிருந்த இடத்திற்கு அருகில் இருந்த அறையில் இருந்து தான் அழுகை ஓசை வருகிறது என்பதையும் அறிந்துக் கொண்டாள்...
காலடி ஓசைக் கேட்டு ‘அவனும்’ திரும்பினான்... சஹானாவைப் பார்த்து அவன் முகத்திலும் வியப்பு தெரிந்தது...
மனதில் பல நாட்களாக இருக்கும் கேள்விக்கு பதில் கண்டுப்பிடித்து விடும் ஆர்வத்தில்,
“ரோஹித்...” என்று பேச தொடங்கிய சஹானா, அதன் பின் தான் இருக்கும் இடம் உணர்ந்து பேச்சை நிறுத்தினாள். யாருக்கு உடல் நலம் சரி இல்லை என்று தெரிய வில்லையே...
அவளின் தயக்கத்தை உணராமல்,
“உள்ளே அவனுக்கு தான் ட்ரீட்மென்ட் தராங்க... கிழே விழுந்து தலையில் அடி பட்டிருச்சு...” என்று அவள் கேட்காமல் விட்ட கேள்விக்கும் பதில் சொன்னான் அவன்.
அவன் அதை சொன்னானோ இல்லையோ, பக்கத்தில் மெல்லிய விசும்பல் சத்தம் கேட்டது... அப்போது தான் அங்கே அருகில் நின்றிருந்த அந்த இருவரையும் சஹானா கவனித்தாள்...
அவளின் பார்வையை கவனித்துவிட்டு,
“அவங்க தான் ரோஹித்தோட அம்மா அப்பா...” என்று விளக்கம் கொடுத்தான் அவன்.
ஏனோ சஹானாவிற்கு அது இனிப்பான செய்தியாக இருந்தது! [ இருக்காதா பின்னே! ;-) ]
ஆனால், அதைப் பற்றி எல்லாம் என்ன ஏது என்று ஆராய்ச்சி செய்யாமல்,
“ரோஹித்க்கு என்ன ஆச்சு?” என்றாள் அவள் அக்கறையுடன்.
Thank you.
waiting for next episode...