(Reading time: 60 - 120 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

பண்ணிடுங்க.”

“ சரி எல்லாம் ரெடி பண்ணிடறோம் நீங்க போய்டு வாங்க!” என்றார் லஷ்மி.

எல்லோரும் கிளம்பினார்கள், "தனம்மா நம்ம கார்லியே ஒன்னா போயிடலாம், செல்வம் தம்பி காரை ஓட்டடும் , காதர் இங்கியே இருக்கட்டும் " நிக்கத் தனத்திடம் கூறினார் .

"சரிங்க ஆண்ட்டி! "தனத்துக்கும் அவர்களோடு போறதுதான் விருப்பம் அதனால் உடனே சரி என்று கூறிவிட்டாள்.

'செல்வம் வந்து நம்ம வண்டிய எடு, காதர் நீ இங்கியே இரு நாங்க வர கொஞ்ச நேரமாகும், நீ வேண்ணா ஒரு தூக்கம் போடு நாங்க வர வரையிலே."

"சரிங்க பாய்  " என்றான் ட்ரைவர் காதர். 

எல்லோரும் தனுஷ்கோடி வீட்டுக்கு சென்றார்கள். போகிற வழியிலேயே தன்னுடைய எண்ணத்தை எல்லோரிடமும் கூறினாள் தனம், "எனக்கும் இந்த ஐடியா பிடிச்சிருக்கு தனம், இந்த ஊர் மக்களுக்கு அதுவும் பெண்களுக்கு ஏற்ற மாதிரி வேலை கொடுப்பது நல்ல எண்ணம் அதையே செய்ஞ்சுடுங்க. " நிக்கத் மனதில் ஒரு திருப்தி .

"என்ன அங்கிள் நீங்க ஒன்னும் சொல்லலியே?, எனக்கு நீங்க ஓகே சொன்னீங்கன்னா நான் இப்பவே சரஸ்வதியை கூட்டு பேசிடறேன், என்ன சொல்றீங்க?"

"நல்ல ஐடியாம்மா, ஆனா இவ்வளவு பெரிய வேலையை அந்தப் பொண்ணால  செய்ய முடியுமா? ஏன் கேக்கறேன்னா இந்த வேலையை செய்யறதுக்கு திறமை வேணும்மா அந்த பொண்ணால முடியுமா?"

"தெரியல அங்கிள், முடியும்னு நினைச்சுதான் வேலையை கொடுக்கலாம்னு தோணித்து, நான் கேட்டு பார்க்கறேன் அவங்க கிட்ட."

"சரிம்மா, உனக்கு  தெரியும் என்ன எப்படின்னு,  நீ ஒரு கம்பெனியில பல பேர் கிட்ட வேலை வாங்கறவ , நீ பார்த்துக்கம்மா, உனக்கு என்ன உதவி வேணுமோ கேளு நான் செய்யறேன்.

 "

"சரிங்க அங்கிள், நான் அவங்க கிட்ட பேசறேன், நீங்க சொன்ன மாதிரி இதுக்கு ஒரு டீம் வேணும் அதை பத்தி சரசுகிட்ட பேசறேன். "

"உங்களை இறக்கி விட்டு, அங்கிருந்து சரஸ்வதி வீடு பக்கம்தான் அங்க போய் அவகிட்ட நேரே போய் பேசிட்டு வரேன். " தனம் கூறினாள்

"ஏன்மா நீ போகனும் யாரைவாது அனுப்பி அந்த பொண்ணை வரச் சொல்லேன். " ஜாஃபர் கூறினார்.

"சரி, ஐயா வீட்ல கேட்டு பாக்கலாம் யாராவது இருக்காங்களான்னு?" தனம் கூறினாள்.

"அஜய் என்னப்பா ஒன்னும் பேசாம வறே? ஏதாவது நினைப்பா?"

11 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.