(Reading time: 60 - 120 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

'ம்ம் , ஆமாம் மாஸ்டர், இந்த ஊர் எவ்வளவு அழகுன்னு பார்க்கறேன்? மாஸ்டர் உங்களுக்கும் இதே ஊரா?"

ஜாபர் உஷார் ஆனார், நிக்கத்தை ஒரு பார்வை பார்த்தார், அவரும் ஜாஃபரை பார்த்தார் "க்ஹும் , ஆமாம் அஜய்! " வாயை மூடிக் கொண்டார் அதற்கு மேல் ஒன்னும் பேசவில்லை .

தனுஷ்கோடியின் வீடு வந்துவிட்டது, ஜாஃபர் மூச்சு விட்டார். உள்ளே நுழையும் முன்பே தனுஷ்கோடி வாசலுக்கு ஓடி வந்தார் .

" வா ஜாஃபர், வாம்மா தங்கச்சி, வாம்மா தனம், அஜய்! " எல்லோரையும் சந்தோஷத்துடன் வரவேற்றார்.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ரொம்ப நாளாச்சு, தனத்தோட பெற்றோர்களை பார்க்க வந்தபோது, அப்போது  வந்து பார்த்தது, அப்போ அவரிடம் ஏதோ வேலையாய் வந்தேன் என்றாரே தவிற, என்ன வேலை என்று சொல்லவில்லை.

"என்ன ஜாஃபர் ரொம்ப யோசிச்சிட்டிருக்க? என் கிட்ட சொல்லவேயில்லை நீ வரேன்னு ?"

'மேலிடம் முடிவு, நான் என்ன சொல்ல முடியும், இந்த குழந்தைகளையும் உங்களையும் பார்க்கணும்னா, என்ன செய்யறது அதான் ரெக்கார்டிங்கை கான்சல் செய்துட்டு வந்துட்டேன்."

"ரொம்ப நல்லது பண்ண, உனக்கும் ஒரு மாற்றம் வேணுமில்ல, தங்கச்சியையும் இப்படி எங்கேயாவது கூட்டிட்டு போகனும்.... பிறகு மகன், மக எல்லாம் எப்படியிருக்காங்க ? பேரன் பேத்தி எல்லாம் ?"

அதற்குள் ஜாபர் பேச்சை மாற்றினார். " ஆமாம் நீ என்ன எல்லாத்தையும் வித்துட்டு போற? என்னதான் பசங்க சொன்னாலும் பூர்வீக சொத்தெல்லாம் விக்கறது சரியில்ல தனுஷு!"

"எனக்கும் தெரியுது, ஆனா பசங்க யாரும் வரவேமாட்டோம் அங்க சொத்து வச்சு என்ன பண்றது. அதை வித்துட்டு சென்னைல இருக்கற பிளாட்டுக்கு வந்துடுங்க இல்லேன்னா எங்ககிட்ட வந்துடுங்கன்னு சொல்றாங்க, ரொம்ப பேசி பார்த்துட்டேன், அவங்களுக்கும் பசங்கள்லாம் பெறியவங்க ஆயிட்டு வராங்க அதான் நானும் கமலமும் முடிவு பண்ணிட்டோம். "

"என்ன தனுஷூ இவ்ளோ பெரிய வீட்ல இருந்துட்டு திடீர்னு பிளாட் எல்லாம் உனக்கு சரி படுமா பார்த்துக்க?"

"தெரியும் பார்க்கலாம், ஏதோ அடஜஸ்ட் பண்ணிக்கணும் ."

கமலம் வெளியே வந்தார், "அட நிக்கத்து அண்ணி எப்படியிருக்கீங்க? நான் நல்லாருக்கேன் அக்கா நீங்க?"

"நாங்க நல்லாருக்கோம், இதோ இந்த பசங்க நம்ம நிலத்த வாங்க ஆசப் படறாங்க, சரி

11 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.