(Reading time: 60 - 120 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"என்ன விஷயம்மா? ஏன் இவ்வளவு நேரம், நாங்க உங்களுக்காகத்தான் காத்துண்டுக்கோம்."

"தெரியும்மா, அதான் சாப்பிடாம வந்திருக்கோம், பசிக்குதும்மா. "

"ஐயோ உனக்கே பசின்னா, குழந்தைக்கு எவ்ளோ பசிக்கும்? வாங்க சாப்பிடலாம்"எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

சுற்றி அலைந்துவிட்டு வந்த களைப்பு சாப்பிட்டு தூங்கினார்கள், தூங்கி எழுந்து, காபியை குடித்துண்டே சென்னை போவதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள், கொஞ்ச நேரத்தில் வாசலில் ஒரு கார் வந்து நின்றது, யாரென்று பார்த்தார்கள் காரிலிருந்து ட்ரைவர் செல்வம் இறங்கினான், அது தங்கள் கார் என்று தெரிந்தது.

அஜய் தான் வெளியே சென்றான் "செல்வமண்ணா, என்ன நீங்க வந்திருக்கீங்க ?"

'ஜாபர் சார்தான், உடனே ஊருக்கு போ அவங்களுக்கு கார் தேவைன்னு சொன்னார், உடனே கிளம்பி போன்னு சொன்னார் தம்பி, அதான் கிளம்பி வந்தேன் ."

"சரின்னா, ஏதாவது சாப்பிட்டீங்களா? உள்ள வாங்க!" என்று டிரைவர் செல்வத்தை உள்ளே கூப்பிட்டான் அஜய்.

"பாட்டி செல்வமண்ணா வந்திருக்கார் ஏதாவது சாப்பிட கொடுங்களேன்! "என்றான் அஜய்.

"இருக்கட்டும் தம்பி, நான் சாப்பிட்டுத்தான் வந்தேன்." என்றான் செல்வம் .

"இது யாருப்பா அஜய்?"

"இது எங்க டிரைவர் அண்ணா!" என்றான் அஜய்.

"இருப்பா நான் சாப்பாடு கொண்டு வரேன்! " என்று லக்ஷ்மி உள்ளே போனார்.

"என்னம்மா வீட்ல  சாப்பாடு ஒண்ணுமில்ல என்ன கொடுக்கப்போற?" என்று வள்ளி உள்ளே வந்தாள்.

"அது சரி ஒண்ணுமில்லேன்னா பாவம் பசியோடவா இருப்பான், உப்புமா செய்ஞ்சு எடுத்து வா!" என்று கூறி விட்டு சென்றாள் லக்ஷ்மி.

 

"செல்வம் நீங்க எப்படி வந்தீங்க ?" என்று தனம் கேட்டாள்.

" அம்மா, மாஸ்டர்தான் அண்ணாவை அனுப்பி வச்சுட்டாரு.' என்று அஜய் சொல்ல,

"ஓ அப்படியா, இருங்க செல்வம் உங்களுக்கு சாப்பிட ஏதாவது எடுத்து வரேன் !" என்று சொல்ல,

"இல்லம்மா பாட்டி ஏற்கனவே கொண்டுவரேன்னு போயிருக்காங்க!"

அன்று இரவு அவர்கள் சாப்பிட்டு விட்டு,  எல்லாவற்றையும் பாக் செய்ய சொல்லி, எல்லோரும் படுக்க சென்றார்கள். அன்று இரவு,   ஜாபர் தனுஷ்கோடியிடம் பேசி அடுத்த

11 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.