(Reading time: 60 - 120 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

என்னோட ரொம்ப க்ளோஸ் பிரெண்ட்ஸ்பிரெண்ட்ஸ்maa! "

"சரிங்க அங்கிள், அதை தவிற நான் அம்மா அப்பாவை சென்னைக்கே கூட்டிட்டு வந்துடலாம்னு இருக்கோம், நானும் அஜயும், என் தங்கைகளுக்கு வரன் பார்க்கணும் அதான் அவங்கள கூட்டிட்டு வரலாம்னு இருக்கோம், நீங்க என்ன சொல்றீங்க அங்கிள்?"

"என்னம்மா இதல்லாம் என்னஎன்னnai கேக்கற, கூட்டிட்டு வாம்மா, நாம் நல்ல பையன்களா பார்த்து நல்லா கல்யாணம் பண்ணிக்கொடுக்கலாம், உன் முடிவு கரெக்ட் தான். "

"அங்கிள் நீங்க வரீங்களா ரெஜிஸ்டர் பண்ணறதுக்கு ?"

'அது முடியாதும்மா, ஒரு முக்கியமான ரெக்கார்டிங் இருக்கு , நீங்களே முடிச்சுட்டு வாங்க, உங்க குடும்பத்தையும்  கூட்டிட்டு வா, நான் தனுஷ்கிட்ட பேசறேன், நீ வேலையை முடிச்சுட்டு வா!"

"சரி அங்கிள், நீங்க வர முடியலைன்னா பரவாயில்ல அங்கிள், நாங்க சென்னைக்கு வந்தவுடன் உங்களை பார்க்கறோம்!"

"சரிம்மா!"

அவரகள் வீட்டின் வாசலின் முன் கார் நின்றது. " ஐயா நீங்களும் உள்ளே வாங்களேன்?"

"இல்லம்மா, நேரமாச்சு நான் பிறகு வரேன்மா, உங்களை சந்திச்சது ரொம்ப சந்தோஷம்மா. "

"எங்களுக்குத்தான் அங்கிள் ரொம்ப தாங்க்ஸ் அங்கிள்!"

'என்னத்துக்கும்மா தாங்க்ஸ் எல்லாம் , நீயும் எனக்கு ஒரு மகள் போலதாம்மா!" என்றார் தனுஷ்கோடி.

“சரிம்மா நான் வரேன், ஜாபர் கிட்ட பேசறேன், நான் வரட்டுமா அஜய் தம்பி?"

"சரிங்க ஐயா, போயிட்டுவாங்க! " என்றான் அஜய்.

அவர் கார் கிளம்பி போனவுடன், அவர்கள் உள்ளே போனார்கள், வீட்டுக்குள்ளிருந்து தனத்தின் அப்பா வெளியே ஓடி வந்தார்..." என்னம்மா பெரிய வீட்டு கார் நம்ம வீட்டு வாசல்ல வந்தது?"

"ஆமாம்பா, எங்களைத்தான் அந்த ஐயா இறக்கிவிட்டு போனார்."

"அப்படியா, என்னம்மா விஷயம் ?"

 'வாங்கப்பா உள்ள போய் பேசிக்கலாம்."

'ஒன்னும் பிரச்சனை இல்லையேம்மா ?"

'அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா, வா அஜய்."

"தாத்தா, ஒன்னும் பிரச்சனை இல்ல, நாங்க அவங்க நிலத்த பார்க்க போனோம், அவங்க விக்கறாங்க அதை நாங்க வாங்கலாம்னு இருக்கோம்."

"ஓ ! அப்படியா?" என்றார் அவள் அப்பா

அவள் அம்மாவும் தங்கைகளும் ஹாலுக்கு வந்தார்கள்.

11 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.