வேற மாதிரி ஆயிடுத்து அதான் சொல்ல முடியல ஆண்ட்டி."
" சரிம்மா பரவாயில்ல,நீ நல்லாயிரும்மா, சந்தோஷமாயிரு."
'தேங்க்ஸ் ஆண்ட்டி!"
"எங்க ரெண்டு பேரோட ஆசியும் எப்பவும் உண்டும்மா தனம்!"
"தேங்க்ஸ் அங்கிள்!"
"அதான் அம்மீ நான் ரொம்ப சந்தோஷமாயிருக்கேன், நாம எல்லாம் ஒண்ணா டின்னர் சாப்பிடணும்னு தோணித்து, அதான் எல்லாரையும் வர சொன்னேன்."
"ரொம்ப நல்லது பண்ண அபூ, நாங்களும் சந்தோஷமாயிருக்கோம்."
செர்வர் வந்து ஆர்டர் எடுக்க வந்தான், அவரவர்கள் வேண்டிய ஆர்டர் கொடுத்தார்கள்.
எல்லோரும் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினர், "ஆண்ட்டி, உங்களோட நிறைய பேசணும் நாளைக்கு வீட்டுக்கு வரமுடியுமா?"
"கண்டிப்பா, எப்போ வரணும்னு சொல்லு?"
"நாளைக்கு ஆபிசிலிருந்து வரும்போது போன் செய்யறேன் ஆண்ட்டி நீங்க வாங்க, வரும்போது சாய்ராவையும், இம்ரானையும் கூட்டிட்டு வாங்க."
"சரிம்மா தனம்!"
"சரி ஆண்ட்டி கிளம்பறோம்."
"சரிம்மா !"
அப்துல் தன் காரில் ஏறும்போது, "ஆதூ, நீ உங்க பாரண்ட்ஸோட போறியா?"
"நீ என்ன சொல்றியோ பண்றேன், ஆனா நீ வருத்தப் படக் கூடாது, ராத்திரி பூரா என்ன நினச்சு தூங்காம இருக்கக் கூடாது."
'டாட் வீட்டுக்கு வறீங்கல்ல, நான் உங்க கூட வரேன்..."
"ம்ம் .... அது வந்து..." தனத்தை பார்த்தான்.
அவள் கண் ஜாடையில் சரி என்றாள்.
"ஆமாம் சன், உன் வீட்டுக்குத்தான் வரேன், இஸ் இட் ஓகே?"
"டாட் , என்ன சொல்றீங்க என் வீடா? அப்பா உண்மையாவே நீங்க என் அப்பாதான?"
'என்னடா?"
"பின்ன, என் வீடுன்றீங்க?"
"சாரி டா ராஜா, உன் அம்மா வான்னாதான் வருவேன், இப்பதான் அவ ஓகே சொன்னா அதான்."
அவள் வெட்கப் பட்டாள், "வாவ் மாம், அம்மா வெக்கப் படறா, டாட்!"
"ஆமாம், வெட்கப்படும்போது எவ்வளவு அழகா இருக்கா பார்' தன் மகனிடம் கூறும்போது..