(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"என்னம்மா, என்ன விஷயம்?"

அங்கே நடந்ததையும், நடப்பதையும் கூறினார்.

"இதோ கிளம்பிட்டேன்."

ஐயோ, என்ன நடக்கப் போறதோ என்று பயந்த வண்ணம் வாசல் பக்கமாகவே பார்த்துக் கொண்டிருந்தார்.

 

"பாட்டிம்மா, உள்ளே வாங்க கவலைப் படாதீங்க பாட்டிம்மா, அப்பா எல்லாம் சமாளிப்பாங்க, நீங்க உள்ளே வாங்க!"

"இல்ல ராஜா, உனக்கு ஒன்னும் தெரியாது..."

"எனக்கு ஒன்னும் தெரியாதுதான் பாட்டிம்மா, ஆனா அப்பாவை இப்பத்தான் புரிஞ்சுண்டேன், அவர் முகமே அவர் சமாளிப்பார் என்று தெரியறது , நீங்க வாங்க."

அவர் உள்ளே போகாமல் அப்துல் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தார்.

"என்ன வேணும் உங்களுக்கு, நேத்து நைட்டே உங்க கிட்ட சொன்னேன், வரவேணாம்னு, இங்க வந்து தொல்லை செய்துட்டிருக்கீங்க."

"அதெல்லாம் சரி உங்க ஜாடையிலேயே ஒருத்தன் உள்ள போனானே, உங்க

அம்மீய பாட்டிம்மான்றான், சாய்ரா அவனை பையான்றா, யார் அந்த ஆள்?"

"அத பத்தி உங்களுக்கு என்ன?"

"நீங்க என் தங்கச்சி புருஷன், எனக்கு எல்லா ரைட்டும் இருக்கு, சொல்லுங்க?"

"அவன் என் மகன், அவன் தான் என்னோட மூத்த மகன். "

"ஐயோ இவ்வளவு பெரிய மகனா, அப்ப......?"

"சரி சொல்லிடேனில்ல, இப்ப உங்க தங்கச்சி உயிரோட இல்ல, அதனால நீங்க இப்ப வம்பு பண்ணாம கிளம்புங்க."

"அதெல்லாம் முடியாது, என் தங்கச்சி பிள்ளைங்க இங்கதான் இருக்காங்க, அவங்க எதிர்காலம் இருக்கு, நீங்க உங்க இஷ்டத்துக்கு பேசிட்டே போறீங்க"

"உங்க தங்கச்சி உயிரோட இல்ல, அவங்க என் பிள்ளைங்க அவங்க மேல எனக்கு பாசமும், பொறுப்பும் இருக்கு நீங்க கிளம்புங்க."

"அதெல்லாம் முடியாது, எங்களுக்கு தெரியணும் எப்படி என் தங்கச்சிய ஏமாத்திக்கிட்டு இத்தனை நாளா இருந்தீங்க, அவ ஏன் அவ்வளவு வருத்தப் பட்டான்னு இப்பல்ல புரியுது, இவ்வளவு பெரிய பையனை வச்சுண்டு ரொம்ப நல்லவன் மாதிரி நடிச்சிகிட்டு இருந்தீர்களா?"

"எல்லாரும் வாங்க," ஜாஃபர் உள்ளே நுழைந்தார், அப்துல் அவரை நிமிர்ந்து பார்த்தான்

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.